பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் நெருங்கும் காலம். பொதுவாக ஆண்டு முழுவதும் படித்ததை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நினைவிற்குள் கொண்டு வருவதும் – நினைவில் வந்ததை ஆசிரியர் விரும்பும் வகையில் வகைப்படுத்தி எழுதும் திறன்தான் தற்போதைய தேர்வு முறை.

நாம் படிக்கும் விசயத்தை நாம் எவ்வாறு நம் நினைவிற்குள் நாம் எவ்வாறு பதிய வைக்கிறோம் என்பதில்தான், நாம் மீண்டும் நினைவிற்குள் கொண்டு வரும் சாமர்த்தியம் சாத்தியமாகும்.

நம் குழந்தைப் பருவத்தில் தாய் நம்மிடம் எழுப்பும் சப்தங்கள் மொழியாக நம் மூளைக்குள் பதிகிறது. மீண்டும் தாய் முகம் பார்க்கும்போது குழந்தை அதே சப்தம் எழுப்பும். இதுதான் நம் மூளை மொழி அமைப்பின் அடிப்படை ரகசியம். குழந்தையில் நம் மூளை ஒரு புதிய பாடம் படிக்கும்போது, வேண்டும்போது நினைவிற்குள் கொண்டுவருவதற்கு வசதியாக  ஒரு உருவத்துடன் சேர்த்து அந்த பாடத்தையும் பதிவு செய்து பழகுகிறது.

உதாரணமாக நம்முடைய கணக்கு பாடத்தில் வரும் சூத்திரம் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள – நமக்கு ரோஜாப் பூ பிடிக்குமென்றால் ரோஜாவை ஞாபகம் வைத்துக் கொண்டே கணக்கு சூத்திரத்தை விவரித்து எழுதிப்பழகுங்கள் அல்லது எழுதி முடிக்கும்போதாவது ரோஜாவை நினைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அந்த கணக்குப் பாடத்தை – சூத்திரத்தை ஞாபகப்படுத்த ரோஜாப் பூவை நினைத்தால் சூத்திரம் தானாக ஞாபகத்தில் வரும். இதை பயிற்சி செய்து பாருங்கள் – அதிசயம் புரியும்.

Pin It