கொஞ்சகாலம் முன்புவரை கண்ணாடி பாட்டில்களின் உபயோகம் அதிகமாக இருந்துவந்தது. மருந்து, பானம், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்பட்டு வந்தன. இன்றோ, நிலைமை தலைகீழ். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வழிவிட்ட நாம் நோய் நொடிகளுக்கும் வழி திறந்து விட்டிருக்கிறோம்.
கைதவறி விழுந்தால் கண்ணாடி உடைந்துவிடும் என்று அச்சப்பட்டது ஒரு காலம். தற்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையாத இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும், கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. நுண்பெருக்காடிகள், காமிரா வில்லைகள், சோதனைக் குடுவைகள் இவையெல்லாம் கண்ணாடியைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
முகம் பார்க்கவும், கைவளையாகவும் மட்டுமே கண்ணாடி பயன்பட்டுவந்த காலம் மலையேறிவிட்டது.
தூய்மையாக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு, சலவை சோடா ஆகியவை கண்ணாடி செய்ய தேவையான மூலப்பொருட்கள். இவற்றை கொதிக்க வைத்தால் அவை உருகி 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாகு போலாகும். பல்வேறு வடிவங்களில் உள்ள அச்சுக்களில் ஊற்றி பலவகை வடிவக் கண்ணாடிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. சில வடிவங்கள் வாயால் ஊதி வார்க்கப்படுவதும் உண்டு.
கண்ணாடியில் எந்த வடிவமும் கொண்டு வர முடியும் என்பதை இன்றைய அலங்கார விளக்குகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். சில உலோகச் சேர்மங்களை கண்ணாடிக் குழம்புடன் சேர்ப்பதால் வெவ்வேறு நிறமுள்ள கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன.
நன்றி: கலைக்கதிர்
தகவல்: மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- தென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்
- அது ஒரு நோய், ஸார்!
- 4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்?
- நாடார் மகாநாடு
- பிதாவே மன்னிக்காதீர்
- அக்கினி சாட்சியாக அங்கத்தினர்!
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- குற்றமும் தண்டணையும்
- விவரங்கள்
- எழுத்தாளர்: மு.குருமூர்த்தி
- பிரிவு: தகவல் - பொது
கண்ணாடிக்கு மாறுவோம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.