ஒவ்வொரு நாட்டின் சில பகுதிகளுக்கோ அல்லது அந்நாட்டின் சில பகுதிகளின் சிறப்பியல்பையொட்டியோ, அதற்கு சில பட்டப் பெயர்கள் உண்டு. அவைகளில் சில:

Romபசிபிக்கின் மகாபிரிட்டன்: ஜப்பான்
நைல் நதியின் நன்கொடை: எகிப்து
இந்துமகா சமுத்திரத்தின் ஜிப்ரால்டர்: ஏடன்
கண்ணீர் வாயில்: பேபல் மெண்டபிள் வளைகுடா
உலகின் கூரை: திபெத்
என்றும் நிலைத்துள்ள நகரம்: ரோம்
எமரால்ட் தீவு: அயர்லாந்து
இருண்ட கண்டம்: ஆப்ரிக்கா
ஏழு குன்றுகள் நகரம்: ரோம்
மோட்டார் கார்களின் நகரம்: டெப்ராய்ட்
நீல மலை: நீலகிரி
மலைகளின் இளவரசி: கொடைக்கானல்
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்: சுவிட்சர்லாந்து
முத்துத் தீவு: பஹ்ரைன்
மத்திய தரையின் சாவி: ஜிப்ரால்டர்
சீனாவின் துயரம்: மஞ்சள் நதி
மூங்கில் நாடு: டோக்கியோ
ஐந்து நதிகளின் நாடு: பஞ்சாப்
நள்ளிரவு சூரியன் நாடு: நார்வே
ஏட்ரியாடிக் ராணி: வெனிஸ்
ஐரோப்பாவின் கலாசார தலைநகர்: பாரிஸ்

(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா?’ நூலிலிருந்து)

Pin It