ரஷிய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான பத்திரிகையான ‘பிராவ்தா’வில் உயிரோடு இருந்த ஒருவரை இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்டனர். 

உடனே அந்த ஆசாமி அடித்துப் புரண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு ஓடி வந்தார். “நான் உயிரோடு இருக்கிறேன் என்று திருத்தம் வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். 

ஆனால், அதற்கு ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. “எங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்தியை நாங்களே மறுத்து இதுவரை செய்தி வெளியிட்டதே கிடையாது” என்று சொல்லி விட்டார். 

“அப்படியானால் என் கதி என்ன ஆவது?” என்று அந்த ஆள் கேட்டார். ஆசிரியர் நிதானமாக சொன்னார்: “கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள். நாளை பத்திரிகையில் குழந்தைகள் பிறப்பு என்ற பகுதியில் உங்கள் பெயரையும் சேர்த்து வெளியிட்டு விடுகிறோம்!”

Pin It