தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
தேங்காய் - துருவியது அரை கப்
வேர்க்கடலை - அரை கப்
பச்சை மிளகு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 தேக்கரண்டி
பெரிஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி நெய் விட்டு அதில் மிளகாய், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும் பின் தேங்காய் துருவல் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியே சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். பச்சை மிளகை விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது வாணலியை சூடாக்கி அதில் வெண்ணெய் விட்டு உருக்கிய பின். பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளையும் மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். அத்துடன் பொடித்த மசால் பொடி, மிளகு விழுது, வறுத்த தேங்காய் துருவல், ஒன்றிரண்டாக உடைத்த வேர்கடலை மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிட்டு, நெய் பிரியும் தருணத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் தேங்காய் சிக்கன் ரெடி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- முதலாளித்துவத்தின் கூலிப்படைகள்
- பிறவி ஆதிக்கம் - பணக்கார ஆதிக்கம் - இரண்டையும் எதிர்க்க வேண்டும் என்று கூறியவர் பெரியார்
- A2 வின் அரசியல் விலகல் ராஜதந்திரமா? பிழைப்புவாதமா?
- இதற்குப் பெயர் ‘இந்துத்துவா’ ஜனநாயகம்
- ‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை’ உருவாக்கக் களம் கண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்
- அறிவியலாளர்கள் எதிர்ப்பு: பசு மாடு குறித்து நடத்தவிருந்த தேர்வு நிறுத்தம்
- உயர்ந்தவர் யார்?
- வினா விடை
- குடுகுடுப்பு காரன்
- திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி
தேங்காய் கோழிக்கறி
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.