தேவையானவை:
 
முட்டை.................. 4 
வெங்காயம்........... 10
பச்சை மிளகாய்.......2
பொட்டுக் கடலை...2 ஸ்பூன்
தேங்காய்..................3 ஸ்பூன்
சோம்பு......................1 /4 ஸ்பூன்
கறிவேப்பிலை..........1 /2 ஸ்பூன்
புதினா.........................1 /2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
எண்ணெய்...............50 மில்லி

செய்முறை:

தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை + புதினா இவற்றை நைசாக அரைத்த பின், வெங்காயத்தை  வைத்து நன்றாக தட்டி, அரைத்த விழுதை எடுத்துக்கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி, அதில் இந்த விழுது+உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

அடுப்பில் தோசைகல்லை/கடாயை வைத்து, எண்ணெய் குறைத்து ஊற்றி, ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும்  திருப்பி போடவும். மறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.

இதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். வெறுமனே.. மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

Pin It