தேவையானவை:

1. பச்சரிசி...............................2 ஆழாக்கு
2. பெல்லாரி...........................3
3. பச்சை மிளகாய்...............12
4. புதினா................................கைப்பிடி அளவு
5. கறிவேப்பிலை.................கைப்பிடி அளவு
6. மல்லி தழை.......................கைப்பிடி அளவு
7. பட்டை................................ சிறு துண்டு
8. கிராம்பு.................................4
9. ஏலம்......................................2
10. இஞ்சி..................................... ஒரு இன்ச் நீளம்
11. பூண்டு....................................10
12. காரட்......................................2
13. பீன்ஸ்.....................................10
14. பட்டாணி...............................1 கப்
15. உருளைக் கிழங்கு................2
16. கத்தரி......................................2
17. முருங்கை.............................1
18. பூசணி...நறுக்கியது...............கைப்பிடி அளவு
19. பட்டர் பீன்ஸ்..........................கைப்பிடி அளவு
20. முட்டைகோஸ்.நறுக்கியது..கைப்பிடி அளவு
21. காலிபிளவர் ...........................சிறியது/கைப்பிடி அளவு
22. தக்காளி....................................4
23. உப்பு..........................................தேவையான அளவு
24. எண்ணெய்.............................50 மில்லி
25. தண்ணீர்...................................5 ஆழாக்கு/ அரிசியைப் போல் 2 1/2 மடங்கு

செய்முறை:

இஞ்சி, பூண்டை நன்கு நைசாக அரைக்கவும். 8 பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி + புதினாவையும் நன்கு அரைக்கவும். பட்டை, கிராம்பை வறுத்து பொடி செய்யவும். வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இங்கே குறிப்பிட்டவை தவிர எந்த காயையும் சேர்த்துக் கொள்ளலாம். எல்லா காயையும் அரை இன்ச் நீளத்தில் வெட்டவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும்.பின்னர் அரிசியை கழுவி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஏலக்காயை உரித்துப் போடவும். சிவந்ததும், நறுக்கிய மிளகாயை + வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதிலேயே அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய், புதினா, கறிவேப்பிலை, மல்லி போட்டு வதக்கி, பின் அனைத்து காய்கறிகளையும், உப்பையும் போட்டு வதக்கவும். 5 நிமிடம் கழித்து அதனை எடுத்து வைக்கவும். குக்கரில் 5 ஆழாக்கு நீர் ஊற்றி, போதுமான உப்பும், எலுமிச்சை சாறும் விடவும்.

அது கொதித்ததும், அதில் கழுவிய அரிசியை போடவும். பின் 5௦ நிமிடம் கழித்து, வதக்கிய காய்கறியைப் போட்டு, கிளறிவிட்டு குக்கரை மூடி, விசிலைப் போடவும். குக்கர் விசில் விடத் துவங்கும்போதே இறக்கிவிடவும்..
 
ஆவிபோனதும் கலவை காய்கறி சாதத்தைச் சூடாகப் பரிமாறவும். ! சுவை சூப்பராய் இருக்கும். .! அதிக மசாலா வாசனை இன்றி லேசான மணத்துடன் கலக்கலாய் இருக்கும்..! இதற்குத் துணையாக தயிர் பச்சடி + ஆவக்காய் மாங்காய் என்றால் கேட்கவே வேண்டாம்.

உருளைக் கிழங்கு சிப்சும் நன்றாகவே இருக்கும்..! கொஞ்சம் அதிகமாகவே காய்கறி சாதம் உள்ளே இறங்கும். குழந்தைகளுக்கு விருப்பமான உணவாகும்..! எல்லா காய்கறிகளும் அதன் சத்தும் அப்படியே இருக்கும்.!

Pin It