தேவையானவை:

உருளைக் கிழங்கு....................1 /2 கிலோ
பெல்லாரி...................................1 /4 கிலோ
தக்காளி.......................................1 /4 கிலோ
தேங்காய்................................ ...1 /2  மூடி
குழம்பு மிளகாய்ப்  பொடி ......... 2 தேக்கரண்டி
இஞ்சி............................................ 1 இன்ச் நீளம்
பூண்டு ..........................................10 பல்
சோம்பு .........................................1/2  தேக்கரண்டி
கசகசா...........................................1 /2   தேக்கரண்டி
சீரகம்.............................................1/2 தேக்கரண்டி
பட்டை........................................ சிறு துண்டு
கிராம்பு...........................................5
எண்ணெய்...................................50௦ மில்லி
உப்பு...............................................தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி...............2 தேக்கரண்டி
 
செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி. 1 /2 கனத்தில் வெட்டவும். பெல்லாரியை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் காம்புப் பகுதியில் உள்ள கடினமான பச்சைப் பகுதியை குடைந்து எடுத்துவிட்டு மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும். சோம்பு, கசகசாவை வறுக்கவும். வறுத்த சோம்பு, கசகசாவுடன், பட்டை கிராம்பை வைத்து நைசாக அரைக்கவும். இஞ்சி பூண்டையும் நைசாக அரைக்கவும். தேங்காயை நைசாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை/குக்கரை  வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 1/4 தேக்கரண்டி சோம்பு போட்டு சிவந்ததும், அதிலேயே நறுக்கிய வெங்காயம் + 1 தேக்கரண்டி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்ப் பொடி போட்டு வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய தக்காளியின் உருவம் தெரியாமல்  நன்கு வதக்கவும். அதிலேயே அரைத்த இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசாவையும் போட்டு நன்கு வதக்கவும்.  பின் நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு 10 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் தேவையான உப்பைப் போடவும். ஏற்கனவே ஒரு தேக்கரண்டி உப்பு போட்டதை மறந்து விடாமல் குறைத்து போடவும். பிறகு 4 டம்ளர் நீர் ஊற்றி, பின்னர் அரைத்த தேங்காய் போட்டு நன்கு கலக்கி, குக்கரில்/வாணலியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

உருளைக் கிழங்கு வெந்தபின், அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். அதற்குள் குருமாவில் எண்ணெய் மிதந்து பார்க்க அழகாய் இருக்கும். கறிவேப்பிலை மல்லி வெட்டிப் போட்டு குருமாவை இறக்கவும்

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It