பன்னாட்டுக் கம்பெனிகளின் பந்தய மைதானம்

உலகில் இன்று ஒவ்வொரு நாட்டின் செல்வ வளத்திற்கும் நாகரீக -வாழ்க்கைத்தர மேன்மைக்கும் அந் தந்த நாட்டின் விமான நிலையங்கள் ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளப் படுகிறது.

அதனால்தான் இன்று இந்தி யாவில் பத்துக்கும் மேற்பட்ட சிறு-மத்தியதர விமான நிலையங்கள் அவ சர அவசரமாக புனரமைக்க அல்லது விரிவாக்கம் செய்யப்படுகிறது. அய் த ராபாத், மதுரை, கோவை, பெங்ளூரு விமான நிலையங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.  உலகத் தரத் திற்கு நவீன மயமாக்குகிறோம் என்ற பெயரில் இந்திய அரசு புதுதில்லி விமான நிலையத்திற்கு ரூ. 7000/- கோடியை செலவழித்தது.  இவ்வாறே ஒவ்வொரு நாடும் தனது செல்வச் செழிப்பின் அடையாளமாக தமது விமான நிலையங்களைக் கருது கின்றன, அதற்காகச் செலவழிக்கின் றன, உருவாக்குகின்றன.

சீனாவின் தற்போதைய ஆண்டு பொருளாதார வளர்ச்சி 12 சத விதமாகவும், இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி 9 சதவிதமாகவும் உள்ளதாகக் கருதப்படுகிறது.

தொழில் - விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் சர்வ தேசப் பட்டியல் எதிலும் இடம் பெறாத தாய்லாந்து தலைநகரின் விமான நிலைய உருவாக்கம் நமது மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றுகிறது. ஏறக்குறைய இந்திய ரூபாய் மதிப்பில் 50,000/- கோடிக்கும் மேல் செலவழித்துக் கட்டப்பட்டிருக் கும் பாங்காக் விமான நிலையத்தின் பெயர் ‘சுவர்ணபூமி.’

எல்லாமே இயந்திரமயப் படுத் தப்பட்ட இந்திரலோகமாக இருக்கிறது இந்த விமான நிலையம். அறிவியல் புனை கதைகளில் (ளுஉநைnஉந குiஉவiடிn) வருவது போன்று அவ்வளவு சிக்கலான, நவநாகரி கமான உயர் பொறியியல் கட்டுமா னங்களைக் கொண்டுள்ளது சுவர்ண பூமி விமான நிலையம்.

ஹாங்காங், டோக்கியோ, இலண் டன், பாரீஸ் விமான நிலையங்களோடு ஒப்பிடும் வகை யில் ஒரு மன்னராட்சி நடைபெறும் நாட்டின் விமான நிலையம் இருப் பது நமக்கு வியப்பைத் தருகிறது.

பாங்காக்கிற்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் ரேச்சா தீவர் பகுதியில், பாங்க் பிலி மாநிலத்தில் சமுத் பிரகான் மாவட்டத்தில் அமைந்துள்ள சுவர்ண பூமி நிலையம் ஒரு மணி நேரத்தில் 76 விமானங்களை கையாளும் திறம் படைத்தது என்பதிலிருந்தே இதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள லாம்.

60 மீட்டர் அகலத்தில் 4000 மீட்டர்.3700 மீட்டர் தொலைவிற்கு இரண்டு ஓடுபாதைகளைக் கொண்ட இந்த விமான நிலையம், உலகின் மிகப்பெரும் விமான வடிவமைப்புகளில் ஒன்றான Airbus/A380 வகை விமானங்கள் வந்திறங்கும் வசதி கொண்டது. இதன் உள் கட்ட மைப்பும் பிரமிக்க வைக்கிறது.

130 கடவுச்சீட்டு கட்டுப்பாட்டு சோதனை மையங்கள், 26 சுங்க சோதனை மையங்கள், 22 சுமை தூக்கும் எந்திர நடை மேடை, 360 பயணியர் கண்காணிப்பு - பதிவு மையங்கள், 107 கண்காணிப்பு கோபுரங்கள், 102 இயந்திர நகரும் படிகள், 83 மின் தூக்கிகள் எனப் பல்வேறு வசதிகள் கொண்ட சுவர்ண பூமி விமான நிலையம் ஆண்டொன்றிற்கு 45 மில்லியன்  சுற்றுலா பயணிகளையும், 3 மில்லியன் டன்சுமைகளையும் கையாளும் திறன் படைத்தாக இருக்கிறது.  இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 5000 கார்களை நிறுத்தக் கூடிய வசதியும் உள்ளது என்பது இன்னொரு சிறப்பம்சம்.

தாய்லாந்து விமான நிலையத் தில் உள் கட்டமைப்பை பற்றி நாம் இவ்வளவு விரிவாக பேசுவதற்கு என்ன காரணம் தெரியுமா. ஆசியாவின் வளர்ந்துவரும் இன்னொரு வல்லரசாக காட்டிக்கொள்ளும் இந்தியாவின் முக்கி யமான விமான நிலையங்கள் இதற்கு அருகில்கூட நிற்க முடியாது என்பது தான், இதனை வடிவமைத்துக் கட்டியது மர்பி / ஜான் எனும் பன்னாட்டு கட்டுமான நிறுவனம்.

உலகெங்கிலிருமிருந்து ஆண் டொன்றிற்கு 211 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த சுவர்ண பூமி விமான நிலையத்தில் கால் பதிக்கிறார்கள். இந்தியாவில் ஆண் டொன்றிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 2.5 மில்லியன். இதை 3 மில்லி யனாக்க அதாவது 30 இலட்சமாக்க மத்திய மாநில அரசுகள் படாதபாடு படுகின்றன.

அய்ரோப்பாவில் யாருக்கேனும் அரைநாள் விடுப்பென்றாலும் தாய் லாந்திற்கு பறந்தோடி வந்து விடுவார்கள் போலிருக்கிறது. நிமிடத்திற்கு ஒன்றாய் கீழிறங்கும் விமான நிலையங்களி லிருந்து ஆயிரக்கணக்கில் அய்ரோப்பி யர்கள் வருகிறார்கள்.

உலகில் இன்று சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பி, அதை விரிவுபடுத்தி, விளம்பரப்படுத்தி அத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நாடாய் இருக்கிறது தாய்லாந்து.  ஐரோப் பியர்களை வரவேற்பதில் காட்டும் ஆர்வம் மற்ற ஆசிய நாட்டவர்களிடத்தில் இல்லை.  இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளுடன் வரலாற்றுக் காலம் தொட்டே பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டிருக்கிறது தாய் லாந்து.

ஐரோப்பியர்கள் கொண்டு வந்து கொட்டும் டாலர்கள் மட்டும் இதற்கு காரணமில்லை.  ஆசிய நாட்டினர் குறிப் பாக இந்தியப் பயணிகள் அவர்களுக்கு மிகமிக தொந்தரவு அளிக்கும் மனிதர் களாக  இருப்பதுதான் இதற்கு காரணம்.  சுவர்ணபூமி விமான நிலைத்தில் எனது ஒரு நாள் அனுபவமே இதற் குப் போது மானது.  சென்னையிலிருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளில் ஏறக்குறைய 80 சதவீதம் பேர் வியாபாரிகள்.  உலகில் மின்னனுப் பொருட்கள் உட்பட சில வகைப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து.

நமது சென்னை வணிகர்கள் பலரும் இப்பொருட்களை அங்கு கொள்முதல் செய்து இங்கு கொண்டு வந்து விற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.  சிறுசிறு குழுக்க ளாக இவர்கள் கிளம்பிச் சென்றாலும் அயல் நாட்டு வணிகம் என்பதால் சிக்கலான நேரங்களில் அல்லது நெருக்கடியான நேரங்களில் ஒரே அணியாகத் திரண்டு விடுகின்றனர்.

ஒரு சென்னை வியாபாரியின் கடவுச்சீட்டிலோ நுழைவு அனுமதிச் சீட்டிலோ ஏதோ ஒரு சிக்கல். சுங்க சோதனை மைய மொன்றில் மென்மையும் நளி னமும் மிக்க தாய்லாந்து இளம் பெண் ஒருவர் மிகமிக மெதுவாக ஆவணங்களைக்  காட்டி சில விளக்கங்கள் கேட்கிறார்.

‘ஆயிரக்கணக்கில் பணம் செலவழிச்சு வர்றோம்.  இவ என்ன கேள்வி கேக்கிறது?’ என்ற பாவணை யில் நமது வியாபாரிகள் குரலை உயர்த்துகிறார்கள்.  குழுவாகச் சேர்ந்து கொண்டு கூக்குரலிடு கிறார்கள்.  “எங்க? உங்க ஏர்போர்ட் மேனேசரைக் கூப்பிடு!”. அந்த இளம் பெண் பயந்தபடியே தனது மேலதி காரியை அழைக்கிறார்.  அவரும்  தாய் லாந்துக்கே உரிய பணிவும் - வணக்கமும் கூறி ‘எங்கள் அய்யம் தீர நீங்கள் உதவ வேண்டும்’ என்கிறார். கூட்டமாய் நின்று உரத்து சத்தமிடு வதாலும் மற்ற பயணியர் சேவை இதனால் பாதிக்கப்பட்டு வரிசை நீள்வதாலும் மேலதிக ஆய்வுகள் இன்றி தங்களை அனுப்பி விடுவார்கள் என்பதே சென்னை வியாபாரிகள்  மனப் போக்காக இருந்தது.

இதனால் விமான நிலையத்தின் பொது அமைதி சீர்குலைய, மற்ற சுங்கச் சோதனை மையங்களிலிருந்த எல்லா அலுவலர்களும் ஓடிவந்து விளக்கம் கேட்டதற்கே மன்னிப்பு கோரி ‘வழியனுப்பி’ வைத்த விநோதமும் இங்குதான் நிகழ்ந்தது.

கடந்து போகும் ஒவ்வொரு அய்ரோப்பிய பயணியும் யார்  இவர்கள்? எந்த நாட்டவர்கள்? எனக் கேட்டறிந்து விடை தெரிந்த பின்பே நகர்ந்தனர்.

நீண்ட வரிசையின் கடையில் நின்றிருந்த என்கையிலும் எனது நண் பரின் கையிலும் இருந்த கடவுச் சீட்டுகளிலும் ‘இந்தியர்கள்’ என்றே இருக்கிறது. வெட்கத்தால் தலை குனிந் தோம்.

எல்லா “இந்தியர்களையும்” விமான நிலையத்திற்கு வெளியே விரட்டியடித்தபின், அந்த அதிகாரிகள் தாய் மொழியில் பேசியதைத் தமி ழாக்கம் செய்தால்,  இன்னொரு முறை நாம் பாங்காக் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டோம்.

இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக் கிறது. இது குறித்து அயலவரிடம் ஆயிரம் கேள்வி கேட் கிறது. இதைத் தவறு என்று கூற முடியாது.  விடை தருவது நமது  கடமை.  அமெரிக்கா போனால், பிரிட்டன் போனால் ஆயிரம் கெடுபிடிகள், அத்தனைக்கும் உட்படுகிறோம்.  ஆனால் தாய்லாந் தில் எகிறுகிறோம்.  நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

இயந்திர லோகமாக உள்ள, சுவர்ணபூமியை விட்டு வெளியில் வந்தால், பாங்காக் நகரமே சிலந்திக் கூடாக இருக்கிறது.  நகருக்கு மேலே அவ்வளவு உயர்மட்ட பாலங்கள்.  சாலை போக்குவரத்திற்கும், இரயில் சேவைக் கும் என நகரமே சிலந்தி வலை போல பின்னப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு உயர் கட்டு மானத் திற்கும் பின்னால் இருப்பது பிரபலமான பன்னாட்டுக் கம்பெனிகள்.  50-60 என உயர்ந்து நிற்கும் பல அடுக்கு கட்டடங் களிலும் தெரிவது பன்னாட்டுக் கம் பெனிகளின்  பெயர்கள் தான்.

பல நூறாண்டாய் தொடரும் மன்னர் ஆட்சியில், தாய்லாந்தியர்கள் தங்கள் வாழ்க்கையையும் - வளத்தை யும் இந்த பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தான் இழந்து கொண்டி ருக்கிறார்கள்.

இயற்கை வளமும் மனித வளமும் மிகுந்த இன்றைய தாய்லாந்து பல பன்னாட்டுக் கம்பெனிகளின் பந்தய மைதானமாய்  இருக்கிறது.

(நன்றி: மண்மொழி)

Pin It