ஒவ்வொரு தேதியும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவை. சிலவே வரலாற்றில் பதியப்படுகின்றன. நினைவுக்கூர வேண்டியதாயினும் அவ்வாறு நிகழ வேண்டும், திகழ வேண்டும் என்பவகைளும் உண்டு. அவ்வாறு ஏற்படக்கூடாது என்பவையும் உண்டு. அவ்வாறான ஒரு நாள் 16. 07. 2004. உலகையே உலுக்கிய நாள் அது. உள்ளங்களை உறைய வைத்த ஒரு தினம் அது. வரலாற்றின் கறுப்பு நாள்.

கும்பகோணம் நகரிலுள்ள _ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 94 இளம் மாணவர்கள் உயிருடன் எரிந்து கட்டைகளாயினர். அல்லது எரிக்கப்பட்டு பிணமாயினர். ஓர் ஊரே மயானமானது. பிள்ளைகளை இழந்த பெற்றேhருக்கு ஆறுதல் கூட முடியா நிலையில் அனைவரும் தவித்தனர். காரணமானவர்களைத் தண்டிக்கவும் கடுமையாக குரல் எழுப்பப்பட்டது. இது குறித்த ஓர் ஆவணப்படமும் உள்ளது. பெயர் ‘என்று தணியும்?’ இயக்கியவர் பாரதி கிருஷ்ணகுமார். குடந்தை சம்பவத்தை முன் வைத்து தொடக்கக் கல்விகள் முழுமையான விதிமுறைகளைப் பின் பற்றி அரசே நடத்த வேண்டும் என்றும் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்றும் கோரியுள்ளது. ‘ஒரு சிற்பத்தின் கதை’ வேறு விதமானது.

மக்கள் எளிதில் எதையும் மறந்து விடக்கூடியவர்கள் என்பதால் நினைவூட்டக் கூடிய வகையிலும் இது போன்ற கொடும் சம்பவம் இனி ஏற்படக்கூடாது என்னும் வகையிலும் ஓவ்வோர் ஆண்டும் ஜூலை பதினாறில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு நினைவுத் தினத்தின் போது ஒரு வெண்கல சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. அச்சிற்பம் உருவான விதத்தையும் அதன் பின்னணியையும் கூறும் ஆவணப்படமே ‘ஒரு சிற்பத்தின் கதை’.

‘ஒரு சிற்பத்தின் கதை’ என்பதற்கு ஏற்ப சிற்பம் உருவாக்கப்படும் விதத்தைத் தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு நிலையையும் காட்டியுள்ளார். ஒரு சிற்பம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் உணரச் செய்துள்ளார். முதலில் களிமண் சிற்பம். அதன் மீது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பூசப்படுவது இரண்டாம் நிலை. மூன்றாம் நிலைகளில் பைபர் இழைகள் ஒட்டப்படுகிறது. அடுத்தது துண்டு துண்டாக அறுக்கப்படுகிறது. இறுதியாக உருக்கிய அலுமினியப் குழம்பு ஊற்றப்பட்டு வெண்கலச் சிலை என்னும் நிலையை அடைகிறது. எல்லா நிலைகளையும் கடந்து நினைவுச் சின்னம் நிறுவப்பட்டு பொது மக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தும் வரையிலும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்னும் திட்டமிடுதலைப் போல அதை ஆவணப்படுத்த வேண்டும் என்னும் திட்டமிடுதலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 24. 05. 2007இல் தொடங்கி 06. 11. 2008 வரை ஒரு வருடத்திற்கும் மேலாக இச் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. 

ஆவணப்படுத்திய ந. செல்வனின் முயற்சியும் ஒளிப்பதிவித்த அர. பிரசன்னாவின் உழைப்பும் போற்றக் கூடியவை. இவரே படத் தொகுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ,ளு,னு. அருளரசன், B,சு, ரவி,P, சிவராம கிருஷ்ணன் ஆகிய கலைஞர்கள் நினைவுச் சிற்பத்தை உருவாக்கியவர்கள. அவர்கள் முகத்திலேயே ஓர் அர்ப்பணிப்பு உணர்வும் ஓர் ஈடுபாடும் தெரிகிறது. ந. செல்வனும் அவர்களை நன்றியுடன் உறையிலேயே அச்சிட்டு பெருமைப் படுத்தியுள்ளளார். தயாரிப்பு B,சு, ரவி. சிற்பிகளுள் ஒருவர்.

ஒரு நல்ல ஆவணப்படத்திற்கு வசனமே தேவையில்லை. காட்சி மூலமே பேச முடியும். ‘ஒரு சிற்பத்தின் கதை’யும் வசனம் இல்லாமலே காட்சியாகவே செல்கிறது. ஓர் இடத்தில் உளியும் மற்றேhர் இடத்தில் சுத்தியலும் பேசியுள்ளது. சிற்பத்தோடு உறவாடுபவை அவைகள் தானே? பின்னணி இசையே பார்வையாளர்களுடன் உரையாடியுள்ளது. பின்னணி என். டி. சந்தோஷ். ஒவ்வொரு காட்சியிலும் ஆங்கிலத்தில் காணும் காட்சியை விவரிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சியாகும். தமிழிலும் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். படம் பார்ப்பவருக்குள்ளும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

‘ஒரு சிற்பத்தின் கதை’ என்னும் இந்த ஆவணப்படம் பல எண்ணங்களை எழுப்புகிறது. உருவாக்கத்தைப் பற்றி ஒரு புற[ம் பேசினாலும் மறுபுறம் ஏன் உருவாக்கப்பட்டது என்னும் வினாவும் உருவாகிறது. நிகழந்த ஒரு கொடுமையைப் பதிவு செய்திருப்பினும் அதன் துயரம் எக்காலத்திலும் அழிக்க முடியாது, அழியாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்நினைவுச் சின்னம் ‘காலத்தின் கொடுமை’. இந்த இரண்டு சொற்களுக்குள் எல்லாமே அடக்கம் என்பதையே உணர வேண்டும். படத்தில் பள்ளியில் நடந்த ‘கொலை’யின் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இக்காட்சிகள் மனத்தையும் எரிக்கின்றன. நினைவுச் சின்னத்திற்கான அவசியத்தையும் உறுதிப்படுத்துகிறது.

ஒவ்வொரு நினைவுச் சின்னத்தின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கும். உண்மை இருக்கும் சிலவற்றுக்கு அர்த்தம் இருக்கும். சிலவற்றுக்கு இருக்காது. சில ஊரின் நடுவில் நின்று மிரட்டிக் கொண்டிருக்கும். சில சாலை நடுவே நின்று பயணத்தைத் தடைச் செய்யும். எங்கும் மனிதர்கள் என்பதை விட எங்கும் சிலைகள், சிற்பங்கள் என்றாகி விட்டது.

கைகால் உடைந்து ஓரிரு சிலைகள்
கைத்தடி கண்ணாடி இல்லாத சிலைகள்
தொண்டர்கள் அடிதடிச் சண்டைகாளாலே
தலையே இல்லாமல் தலைவரின் சிலைகள் என்னும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்வஷினியின் கவிதையை நினைவூட்டியது. தலைப்பு ‘சிலைக் காட்சியகம்’. தொகுப்பு ‘தோகையெல்லாம் துப்பாக்கிகள்’.

ஒரு கல்வி வியாபாரியின் பணத்தாசை தீயில் எரிந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவாக எழுப்பப் பட்டுள்ள இந்நினைவுச் சிற்பம் தேவையானதே. கல்வி வியாபாரிகள் கண்டு மனம் மாற வேண்டும். பிள்ளைகளை பணம் காய்க்கம் மரங்களாக பார்க்கக் கூடாது. விதிப்படி பள்ளி கட்டப்பட்டிருந்தால் பிள்ளைகளின் விதி முடிந்திருக்காது. இந்நினைவுச் சின்னத்திற்கும் தேவையிருக்காது. அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னம் வருபவர்களின் சிந்தனையைக் கவரும். செயல்பட தூண்டும். ந. செல்வனின் அக்கறையிலும் முயற்சியிலும் உருவான ‘ஒரு சிற்பத்தின் கதை’யோ பல இடங்களில் சென்று காண்போரின் கவனத்தை ஈர்க்கும். இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கும்.

‘ஒரு சிற்பத்தின் கதை’ மூலம் சிற்பிகளையும் போற்றியுள்ளார். சிந்தனையும் கிளறியுள்ளார் ந. செல்வன். இது ‘ஒரு சிற்பத்தின் கதை’ அல்ல. ‘தொன்னூற்று நான்கு இனம் உயிரிகளின் கதை’. ஆவணப்படங்களில் தனித்துவமானது ‘ஒரு சிற்பத்தின் கதை’.

 வெளியீடு
 ந. செல்வன்
 பா-பெ மர். அ. செந்தில்
 1 மாருதி நகர்
 கடலூர் நெடுஞ்சாலை
 காந்தி நகர்
 நெய்வேலி 607308
 
- பொன்.குமார்

Pin It