தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் சிறப்புக் காட்சியை, அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து பார்த்தார். படம் குறித்து அவர் கூறுகையில், "சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளியாக சீனுராமசாமி திகழ்வது குறித்து மகிழ்கிறேன். மழைகூட நிராகரிக்கும் வறட்டுப் பிரதேசத்தில் நிகழும் இக்கதையைப் பார்த்த பிறகு மனசுக்குள் மழை பெய்கிறது. இதுவரை யாரும் சொல்லாத தளத்தில் காதல் கதை தடம் பதிக்கிறது. எனக்கு ஏற்பட்ட இதே உணர்வை ரசிகர்களுக்கும் இயக்குநர் ஏற்படுத்திவிட்டார் என்றால், மீண்டும் ஒரு பாரதிராஜா பிறந்துவிட்டார் என்று தமிழுலகம் இயக்குநரைக் கொண்டாடும். சினிமாவைப் பார்த்து சினிமாவை உருவாக்கும் மோசமான கலாசாரம் உருவாகிவிட்ட இச்சூழலில், தனித்துவத்துடன் ஒரு துண்டு வாழ்க்கையைப் பதிவு பண்ணி இருக்கிற அபூர்வப் படமாகும் தென்மேற்குப் பருவக்காற்று. இது பெரிய வெற்றிபெறும்" என்றார்.

சேது, வசுந்தரா, சரண்யா, பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு ஒளிப்பதிவு செழியன், படத்தொகுப்பு காசிவிஸ்வநாதன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சீனுராமசாமி.

Pin It