இந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (grievous hurt) ஏற்படுத்தும் குற்றத்தை வரையறுக்கிறது.

வரையறை:

கீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும்.

1. ஆண்மையிழக்கச் செய்தல் (Emasculation)

2. ஏதேனும் ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்

3. ஏதேனும் ஒரு செவியின் கேட்கும் தன்மையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்

4. ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ இழக்கச் செய்தல்

5. ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ சிதைத்தல் அல்து வலுவிழக்கச் செய்தல்

6. தலை, முகம் ஆகியவற்றை உருக்குலைத்தல்

7. பல், எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்படும் படியோ அல்லது அவை விலகிப்போகும்படியோ செய்தல்

8. உயிருக்கே ஆபத்து, இருபது நாட்களுக்கும் மேலாக வலி அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் காயமுண்டாக்குதல்.

இத்தகைய குற்றத்திற்கு 7 வருட சிறை வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

- க.சிவராம கிருஷ்ணன், அரசு சட்டகல்லூரி மாணவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.