spider

 

ஹவாய் தீவில் வசிக்கும் சிரித்த முகம் சிலந்திகளுக்கு உடம்பில் ஏகப்பட்ட நிறங்களும் வடிவங்களும் காணப்படுகின்றன. பூச்சியின் முதுகில் சிரிக்கும் முகத்தை வரைந்தது போன்ற படம் இருப்பதால் இதற்கு அப்பெயர். இருந்தாலும் இந்த இனத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான வடிவங்கள் இருப்பதில்லை.

எதற்காக இத்தனை வேஷம் போடுகின்றன என்று பார்த்தபோது அது வேட்டையாடித் திண்ணும் பூச்சிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க என்பது தெரிந்தது. சிலந்திகளைப் பிடித்துத் தின்னும் குளவிகள் திடீரென்று வித்தியாசமாக ஒரு சிலந்தி இருந்தால் பிடித்து சாப்பிடத் தயங்குகின்றன. இது வழக்கமான சிற்றுண்டி இல்லையே என்று யோசிக்கும் நேரத்தில் சிலந்தி தப்பித்துக் கொள்கிறது. அதனால்தான் அந்த இனத்தில் அத்தனை உருவ பேதங்கள் காணப்படுகின்றன.

-     முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It