donkeys2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன.

இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் பாரம்பரிய மருந்து உற்பத்தி செய்வதற்கென உலகம் முழுவதிலும் இருந்து கழுதைகள் திருட்டுத்தனமாகவும், நேரடியாகவும் கடத்தப் படுகின்றன.

சீனாவில் ஆண்டுக்குச் சுமார் 48 லட்சம் கழுதைத் தோல்கள் தேவைப்படுகின்றன. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

உலகெங்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் - குறிப்பாகப் பெண்கள் - உடைய வாழ்வாதாரத்துக்குக் கழுதைகள் பேருதவியாக உள்ளன. தண்ணீர் கொண்டு செல்லுதல், உடல்நலம் குறைந்தோரை மருத்துவமனைகளுக்கும், குழந்தைகளைப் பள்ளிக்கும் கொண்டு செல்லுதல் போன்றவற்றுக்குக் கழுதைகள் பயன்படுகின்றன.

கடத்திச் செல்லப்படும் கழுதைகள் மிக மோசமான முறையில் நடத்தப் படுகின்றன. அதன் விளைவாக ஐந்தில் ஒரு பங்குக் கழுதைகள் வழியில் இறந்து விடுகின்றன.

https://thewire.in/environment/is-indias-donkey-population-falling-prey-to-chinese-ejiao-producers

---------------------

உலகின் காடுகள், புல்வெளிகள், 'தரிசு' நிலப் பகுதிகள், பனிப் பாறைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் சுமார் 4,35,000 வகையான புதலிகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.

பசுங்குடில் வளி வெளியீடு, புவி சூடேறுதல், காடழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளின் விளைவாக மேற்கண்ட நிலப் புதலிகளில் (அதாவது, நீர் நிலைகளில் அல்லாது நிலத்தில் வளரும் செடி, கொடி, மர வகைகள்) நாற்பது விழுக்காடு அழியுந் தருவாயில் உள்ளன!

நம் மிதமிஞ்சிய நுகர்வு, அதைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ('முதலாளித்துவம்' எனப்படும்) முதலாண்மைப் பொருளாதார முறைமை ஆகியவையே இந்தப் பேரழிவுக்குக் காரணங்கள்.

நமக்கு உணவாகப் பயன்படுகின்ற புதலிகளின் 'உறவுகளும்' அழிந்து வரும் புதலியினங்களில் அடங்கும். இது நம் வருங்கால உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். (இப்போது நாம் விளைவிக்கும் பயிர்கள் புதுப் புது நோய்களால் தாக்கப்படல், சூழல் மாறுபாட்டால் விளைச்சல் குன்றுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கையில் அப்பயிர் வகைகளின் 'உறவு'களில் இருந்து வலு மிக்க புதுப் பயிரினங்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால், அப்படி உறவாகும் உயிரினங்கள் அழிந்து விட்டால் புது ரகங்களை உருவாக்குவது மிகக் கடினமாகிவிடும்.)

https://truthout.org/articles/climate-crisis-threatens-a-third-of-plant-species-endangering-food-supply/

- பரிதி

Pin It