நாம் நம் அன்பையும், நேசிப்பையும் நம் காதலிக்கு தெரிவிப்பதை 'காதலர் தினம்' என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய மன்னனுக்கு எதிராக, காதலர்களுக்கு ஆதரவாக இருந்து திருமணங்கள் செய்து வைத்ததால், மன்னனின் கோபத்திற்கு ஆளாகி,  செய்ன்ட் வாலண்டைன் கி.பி 270ஆம் ஆண்டு பிப்ரவரி, 14ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவர்  ஞாபகார்த்தமாக கி.பி 498லிருந்து பிப்ரவரி, 14ஆம் தேதியை வாலண்டைன்ஸ் தினமாக போப் கிளேஷியஸ் அதிகார பூர்வமாக அறிவித்தார். நாம் இருவரும் இன்று போல் என்றும் துணையாய் இருப்போம் என்று பரிசுகள் வழங்கி, வாழ்த்துத் தெரிவித்து மகிழ்கின்றனர். ஆனால் பறவை இனங்களும் - அப்படி ஆயுள் வரையில்லாவிட்டாலும் - முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஒரு பருவத்தில் மட்டுமாவது இணை பிரியாமல் வாழ்கின்றனவா என DNA டெஸ்ட் வழியாக ஆராய்ந்ததில் அப்படியில்லை என்றும், ஆச்சரியமான சில உண்மைகள் கண்டறியப்பட்டன.

பாடும் பறவைகள் (Song birds  - குயில் ?) DNA ஆய்வில் தெரிய வந்த உண்மைகள்:

உதாரணத்திற்கு, ஒரு கூட்டிலுள்ள நான்கு குஞ்சுகளைப் பரிசோதித்ததில் இரண்டு குஞ்சுகள் மட்டுமே ஒரே பெற்றோரின் குஞ்சுகள் எனத் தெரிய வந்தது.

மற்ற இரண்டு குஞ்சுகளின் தாயோ, தந்தையோ அல்லது இரண்டுமே வேறெனத் தெரிந்தது.

எனவே, பாடும் பறவைகள் (மற்ற பறவைகளும் கூட) வெவ்வேறு துணையுடன் இணைய வாய்ப்புள்ளதென்றும், இது இயல்பானதுதான் என்றும் தெரிகிறது.

ஒரு கூட்டிலிருக்கும் குஞ்சுகள் கலப்பு பெற்றோர்களின் சந்ததியாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.

சில பறவைகள் -உதாரணத்திற்கு, ராஜாளி வகையைச் சேர்ந்த பருந்து ஜோடிகள் தங்கள் வம்சத்தை விருத்தி செய்ய முடியவில்லை என உணர்ந்தால், தன் இணைப் பறவையைப் பிரிந்து வேறு துணையைத் தேடிக் கொள்கின்றனவாம்.

ஆனாலும், வாத்துகள், அன்னப் பறவைகள் மற்றும் சில வகை கடல் பறவைகள் தங்கள் துணையை மாற்றிக் கொள்ளாமல், வாழ் நாள் முழுதும் இணை பிரியாமல் உண்மையான காதலுடன் வாழ்கின்றனவாம்.

(ஆதாரம்: பிப்ரவரி 08, 2011 தேதியிட்ட eNature இதழிலிருந்து)

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It