Lion_tailed_Macaqueமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் அரிய விலங்கு சோலைமந்தி (ஆங்கிலத்தில் Lion Tailed Macaque). IUCN கணக்கெடுப்பின்படி இந்த வகைக் குரங்கு 2500க்கும் குறைவாகவே உள்ளன. உலகின் வேறு எங்கும் பார்க்கமுடியாத இந்த விலங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழங்கள், பூக்களின் மொட்டுகள், கொட்டைகள் மற்றும் ஒரு சில பூச்சி வகைகளை உண்டு வாழும் இந்த வகை குரங்கு பத்து கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். சிங்கத்தில் வால் போல இதன் வாலும் நீண்டு இருக்கும். முகத்தில் பிடரி மயிர் காணப்படும்.

சாதாரண குரங்குகளைப் போல இவை மனிதர்கள் இடத்தில் நெருங்குவதில்லை. வனம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளவதால் இவற்றின் வாழ்க்கை முறையில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகின்றன. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இவை மிச்சம் இருப்பதால் துரிதமான சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவற்றைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக வனத்துறையினர் புதிய மரக்கன்றுகளை நடும்போது இவற்றின் உணவுச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல மரக்கன்றுகளை நட வேண்டும். இந்த விலங்குகளின் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாதவண்ணம் போக்குவரத்தை வனப்பகுதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

Pin It