குழந்தை எவ்வாறான தோற்றமுடையதாயிருக்கும் என்பது இதன் உடல் உயிர்மங்களில் (body Cells) உள்ள 46 இணைமரபுக் கீற்றுகளைப் (genes) பொறுத்தது. இந்த இணை மரபுக் கீற்றுகளில் பாதியைத் தாயிடமிருந்தும் மற்ற பாதியைத் தந்தையிடமிருந்தும் பெறுகிறது. இவற்றுள் சில இணை மரபுக் கீற்றுகளே குழந்தையின் கண் நிறத்தை நிச்சயப்படுத்துகின்றன.

Brown_Eye_370எல்லாக் கண்களும் நீல உயிர்மங்களை உடை யன. ஆனால் சில மக்கள் வேறு நிறங் களுடைய உயிர்மங்களை உடையவராய் இருப்பதால் அவர் களுடைய கண்கள் பச்சை, சாம்பல், பழுப்பு, செம்மை கலந்த பழுப்பு (hazel) ஆகிய நிறங்களை யுடையனவாய் இருக்கின்றன. குழந்தைகள் எல்லோரும் நீலக்கண்களையே உடையவர்கள். ஏனென்றால் பிற உயிர்மங்கள் ஏதாவது இருக்கு மானால் அந்த உயிர்மங்கள் குழந்தைகள் இரண்டு வயது ஆகும் வரை அவை வளர்ச்சி அடைவ தில்லை. சில சமயங்களில் சிலர், ஒரு பகுதி நீலமாகவும் மற்ற பகுதி பழுப்பு அல்லது பச்சை யாகவும். கண்கள் கொண்டிருப்பர். இதற்குக் காரணம் அவர்களுடைய பாதிக்கண் வழக்கமான நீல நிறங்கொண்டாயும் மற்ற பாதி பிற நிறம் கொண்டதாயும் இருப்பதே ஆம்.

இரண்டு நீலக் கண்களுடையோர்க்கு நீலக்கண்கள் கொண்ட குழந்தைகள் பிறப்பர். ஏனெனில் நீல உயிர்ம இணைமரபுக் கீற்றுகளே (blue cell-genes) அங்குக் கடத்தப்படுகின்றன. ஆனால் பெற்றோருள் ஒருவர் பழுப்பு நிறமும் மற்றவர் நீலமும் உடையவரானால் நீலமும் பழுப்பும் கலந்த மரபுரிமை கடந்தாலும் குழந்தையின் கண்கள் நீலநிறங்களை ஆதிக்கம் செலுத்தக் கூடிய அளவு பழுப்பு நிறங்கள் இருந்தாலே இரு நிறங்கொண்ட கண்களை இக்குழந்தைகள் உடையதாய் அமையும். இரண்டு பழுப்பு நிறக்கண்கள் கொண்ட பெற்றோர்களாயினும் போதுமான அளவு பழுப்பு நிறங்கொண்ட இணை மரபுக் கீற்றுகள் கடத்தப்படவில்லையானால் பழுப்பு நிறக்கண்கள் கொண்ட குழந்தைகள் பிறவா. போதுமான பழுப்பு நிற இணை மரபுக் கீற்றுகள் கடத்தப்பட்டாலே பழுப்பு நிறக் கண்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கும்.

Pin It