மனிதனின் இரத்தக்குழாய்களுக்குள் நீந்திச்செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுவருகிறது.
இரத்தக்குழாய் அடைப்புகளின்காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக்குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்படவைக்க இயலும்.
ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricity ஐ பயன்படுத்தி இயங்கச்செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம்.
அறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும். மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தகவல்: மு.குருமூர்த்தி