Weight (எடை)                      உயரம் (c.m) kg

1. குழந்தை பிறந்தவுடன்                                        2.5 – 3                                        48 - 50

2. 3 மாதம்                                                                            5                                            52 – 55

3. 6 மாதம்                                                                       6 – 5                                          60 – 65

4. 9 மாதம்                                                                       8                                                 65 – 68

5. 1 வருடம்                                                                 9 – 10                                           70 – 72

6. 2 வருடம்                                                                    12                                               80 – 85

7. 3 வருடம்                                                                14.5                                               85 – 90

8. 5 வருடம்                                                                   18                                             100 – 105

குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள்

(1)    3 மாதம்              

திடீரென ஒலி கேட்டால் குழந்தைகள் திரும்பிப் பார்க்கும். விளையாடுதல் சிறிது இருக்கும். அம்மாவின் முகமும், தொடு உணர்ச்சியும் புரியும்.

(2)    6-வது மாதம்

குழந்தைகள் கவிழ்ந்து படுக்க ஆரம்பிக்கும். எதையும் பிடிக்காமல் உட்கார ஆரம்பிக்கும். தான் பார்க்கும் முகங்கள் யார் என்று புரிய ஆரம்பிக்கும்.

(3)    9-வது மாதம்

எதையாவது பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கும்.

(4) 1 வருடம்

எந்த வித உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பிக்கும். பொருட்களை கையால் எடுக்க ஆரம்பிக்கும். சிறிய வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும். குடும்ப மனிதர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.

(5)    2 வருடங்கள்

மாடிப்படி ஏறுதல், ஓடுதல், காகிதத்தில் கோடுகள் வரைதல் போன்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கும்.

(6)    3 வருடங்கள்

வாக்கியங்கள் பேச ஆரம்பிக்கும். மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆரம்பிக்கும். சிறிய பாடல்கள் பாட ஆரம்பிக்கும். மூன்று சக்கர வண்டி ஓட்ட ஆரம்பிக்கும்.

(7)    5 வருடங்கள்

படித்தல், வரைதல் போன்றவை ஆரம்பிக்கும். சிறிய, சிறிய பாடல்கள் மனப்பாடமாக சொல்ல ஆரம்பிக்கும். பள்ளி செல்ல விரும்ப ஆரம்பிக்கும்.

மேலே இங்கு குறிப்பிட்டள்ளது பொதுவானது. இது குழந்தைக்கு, குழந்தை சிறிது வேறுபடும். அதற்காக பெற்றோர்கள் கவலைப்பட அவசியமில்லை. குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சரியான உணவுகளைக் கொடுத்து நல்ல உணவு பழக்கங்களை சொல்லிக் கொடுத்து பழக்க ஆரம்பித்தால் குழந்தைகள் எந்தவித நோய்நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக வளரும்.

Pin It