வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி. 1600 களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள்.

வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. இதை நறுக்கும் போது வெண்டைக்காயுலுள்ள அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது. பறித்துவிட வேண்டும் போதே இருக்கும் இளசாக பறித்த பிறகு கூட சீக்கிரமே முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். புழு வெண்டைக்காயினுள் இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும் ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துக்கள் கலோரி 25, நார்ச்சத்து-2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 ஐம, விட்டமின் சி 13.04 மில்லிகிராம், ஃபாலிக் ஆசிட் - 35.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லிகிராம், மெக்னீசியம் -46 மில்லிகிராம்.

வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.

மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினால் கொழகொழப்பு அவ்வளவாக இருக்காது.

வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.

மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும்.

இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.

வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலடாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்துசாப்பிடுவதில்லை.

இளசான வெண்டைக்காயை துண்டாக்கிமுட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம்.

முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)
Pin It