சில மனிதர்கள் கறுப்பு, வெண்மை தவிரப் பிற நிறப் பார்வை இல்லாதவர்களாயுள்ளமைக்குக் (Colour blind)  காரணம், கண்விழியின் பின்புறத்திரையிலுள்ள குவி முகடுகளில் மூன்று வண்ணப் பொருள்கள் இயல்பு கடந்தமைந்திருப்பதால் என அறிவியலார்கள் நினைக்கின்றனர். ஏனெனில் அவ்வண்ணப் பொருள்கள் நிறப்பார்வைகள் ஒழுங்குபடுத்தத் தேவையானவை என ஊகிக்கின்றனர்.

eye_231ஒளி நிழற்பட்டை (spectrum)யில் உள்ள எந்த நிறமும் மூன்று தூய்மையான மாறியல் (Variables) மதிப்பு முனைப்பாகக் கொண்ட மூன்று ஒளி வண்ணப் பட்டை (Spectral colours) நிறங்களின் கலவையோடு ஒத்தியலக் கூடும். ஆனால் அதன் அளவை நீளம் மாறாத்தன்மையுடையதாகும். நிறப் பார்வையின்மையுடையோருக்கு மூன்று வண்ணப் பொருள்கள் வழக்கமாக இருப்பினும் இயல்பான நிலைக்கு மாறாக அதன் முனைப்புத்தன்மை (intensity) வேறுபட்டிருக்கும்.

அவர்கள் எல்லா நிறங்களையும் பார்க்கக் கூடும். ஆனால் சிவப்பு, பச்சை, மஞ்சள் அல்லது நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களிடையே உள்ள நிறவேறுபாடுகளை அறியத் துன்பப்படுவர். அதாவது அந்நிற வேறுபாடுகளை அறிய மாட்டாமல் கறுப்பு வெள்ளையாகவே பொருள்களை அறியக் கூடும். ஒன்று அல்லது இரண்டு வண்ணப் பொருள்கள் மட்டும் இல்லாமல் போவது மிக அருமையாம். ஆனால் நிறவேறுபாட்டுப் பார்வை கண் விழிப் பின்புறத் திரையிலுள்ள குறைவான குவிமுகடுகளால் முழுமையாக இல்லாமல் சில சமயங்களில் ஆகிவிடுகிறது.

நிறப்பார்வையின்மையுடைய பெரும்பாலான மக்கள், இயல்பு கடந்த தன்மையைத் தனிப்பட்ட சிறந்த சோதனைகளால் எடுத்துக்காட்டும் வரையில் அறியாமையுடையவர்களாவர்.

பொதுவாக அது ஒரு பெரிய இடையூறில்லை ஆயினும் சில தொழில்களும் சில நிலைகளும் நிறங்களை அப்படியே காண வேண்டிய கட்டாயம் உள்ளவை. எடுத்துக்காட்டாக, விமான ஊர்தி ஓட்டுநர்க்கு விரைவில் நிறங்களைப் பிரித்தறியும் பார்வை மிக முக்கியமான தேவையாகும். நிறப்பார்வையின்மைக்கு, பாரம்பரிய அம்சங்களும், மரபு நுட்ப அணுக்களும் காரணமாக இருக்கக்கூடும்.

-கா.மீனாட்சி சுந்தரம்

Pin It