பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜெர்மானிய நாட்டு எச்ட்ரஸர் (H.Dresser) என்பவரால் ஏஸ்பிரின் என்ற மருந்து மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏஸிட்யலாஸ்லி கிளிக் ஏசிட் (Accetylsalicylic acid) தயாரிப்பான இது வணிகப் பெயரால் ஆனது.

கடந்த நூற்றாண்டில் இந்த அமிலத்தின் (acid) பல்வேறு தயாரிப்புகள் மருத்துவ நோக்கங்களுக்காக அறிமுகமாயின. ஆனால் திருப்திகரமாய் அமைந்த ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஏஸ்பிரின், முதலாவதாக ட்ரஸர் அவர்களால்தான் உற்பத்தி செய்யப்பட்டது.

ஏஸ்பிரினின் முக்கிய கலவைக் கூறுகள், இயல்பான பல செடிகளின் பூக்கள், பழங்கள், இலைகள், வேர்கள் ஆகியவற்றிலிருந்து அமைந்தவை. ஆம். தென்அமெரிக்க இந்தியர்கள், இனிப்புப் பூர்ச்ச மரப்பட்டை (Sweet birch), பசுமைமாறாக் குத்துச் செடியினம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நலம் தரும் சிறப்புத் தன்மைகளை நன்கு அறிந்திருந்தனர். அவைகள் ஏஸ்பிரினுக்கு இணையான மருந்துச் சத்துகளைத் தந்து மருந்தாக உதவின.

தலைவலி, சளி அல்லது நீர்க்கோப்பு (Cold), நீர்க்கோப்புக் காய்ச்சல், வலிகள் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிக்க ஏஸ்பிரின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலான ஏஸ்பிரின் மாத்திரைகள் உட்கொள்ளின் நோயைப் போக்குவதற்குப் பதிலாகத் தலைசுற்றுதல் (Dizziness), தலைவலி, பிற வலிகள் போன்ற நோய்களைத் தரும். ஆகையால் மிகக் கவனமாக எச்சரிக்கையுடன் ஏஸ்பிரினைப் பயன்படுத்த வேண்டும். சமீபகாலமாக ஏஸ்பிரின் இருதய நோய் தாக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. அலகு மிகையானால், இரைப்பையில் குருதிப் பெருக்கு ஏற்பட்டு இரத்த வாந்தி உண்டாகலாம்.

Pin It