உடலில் ஏதாவது பகுதி புண்படுத்தப்படும் போது குருதி உறைகிறது. அவ்வாறு குருதி உறையவில்லையானால் காயம்பட்டவன் குருதி இழப்பால் இறக்க நேரிடும்.

குருதி உறைதல் அல்லது குருதிக்கட்டு, புண் ஆறுவதற்குரிய முதற் படியாம். அது புண்ணை மூடி நிணநீரில் அதாவது குருதி நீரில் ஏற்படும் (plasma) வேதியியல் செய்கையின் உதவியால் புதிய இழைமங்கள் சாரக்கட்டு (Scoffold) வழிவகை செய்கிறது. இந்தச் செய்கை முறையில் குருதியிலுள்ள உயிர்மங்களாலான நுண்ணுடல்கள் த்ரொம்போ பிளாஸ் டின் (Thromboplastin) என்பதைத் தோற்றுவிக்கிறது. குருதியிலுள்ள புரதமான ஃபைப்ரினோஜன் கட்டியாக உறையக்கூடிய கசிவுநீராக (Fibrin) மாற்றுகிறது. புண்ணின் ஓரங்களை இணைத்து மேலும் குருதி உயிர் மங்கள் சேதமாகதபடி தடுக்கிறது. பெரும்பாலும் பல நேரங்களில் புண்ணின் மீது பாதுகாப்பாக அசறு போன்ற மேல் படிவு அமைகிறது.

Pin It