ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரதின வெள்ளிவிழாவைக் கொண்டாஅரசாங்கத்தால் ஏற்பாசெய்யப்பட்டிருக்கிறது. அதாவது ‘  இந்தியாவுக்குப் பல நுற்றாண்காலமாக இருந்து வந்த அந்நிய நாட்டான் ஆட்சி ஒழிந்து நம்நாட்நைாமே ஆளும்படியான சுதந்திர சுயாட்சி ஏற்பட்25 ஆண்டுகள் ஆனதாகவும், அதற்காக  சுதந்திரதின வெள்ளிவிழாக் கொண்டாடுவது என்றும் ஏற்பாசெய்யப்பட்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் நான் இதை‘சுதந்திரம் பெற்றநாள்’ என்று சொல்ல மாட்டேன். மற்றென்னவென்றால் அடிமையும், மடமையும், ஒழுக்கக்கேடும், நேர்மைக்கேடும் ஏற்பஏதுவான துக்கநாள் துவங்கிய 25 ஆம் ஆண்துக்கநாள் என்றுதான் சொல்வேன்.

இதை இன்றுமாத்திரம் சொல்லவில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் என்று என்றைக்கு வெளியிடப்பட்டதோ  அன்றே சொன்னவன் நான். சுதந்திரம் என்று முதலில் விஷயம் வெளியானவுடன் உயர்திரு. அண்ணா அதைச் ‘சுதந்திரநாள்’ என்று பாராட்டினார். அதைக் காங்கிரசுக்காரர்கள் பெரிதாகப் பாராட்டி, துணித்தோரணங்களில் ‘இது சுதந்தரநாள்’ என்று எழுதி ‘அண்ணாதுரை’ என்றும் எழுதி அவற்றைத் தெருத்தெருவாகக் கட்டிவைத்தார்கள். பத்திரிகைகளிலும் கொட்எைழுத்துக்களில் விளம்பரம் போல் பிரசுரித்தார்கள்.

அநேகமாக, அந்தச்சம்பவம்தான் அண்ணாதுரைகும் நமக்கும் மாறுபாவெளியான சம்பவமாக இருக்கலாம். அதுமாத்திரமல்லாமல், அடுத்தவிஷயத்தை மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன், அவர்கள் ஒரு கூட்டத்தில் (பொள்ளாச்சி கூட்டத்தில் என்பதாக ஞாபகம்) ‘இதுசுதந்திரநாள்’ என்று பேசினார் என்பதைக் கேள்விப்பட்டு, நான் கண்டித்தேன். .அப்போது, அதற்குப் பதில் என்பதாக நாவலர் அவர்கள், “ஒரு விஷயத்தில் தலைவர் ஒரு கருத்துக் கொண்டால் அதை மக்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டாமா? தலைவர் கருத்து இப்படிப்பட்டது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சொன்னார்

ஆகவே இதுதுக்கநாள் என்பதைச் சுதந்திர அறிக்கை வெளியிடப்பட்நாளிலேயே, “இது துக்கநாள். நாட்டிற்கும் மனித சமுதாயத்திற்கும் கேடான நாள்” என்றுசொன்னேன். இதை அந்தநாள் குடிஅரசுப் பத்திரிக்கையில் பார்த்தால் நன்றாக விளங்கும் . அதுஎப்படியோ இருக்கட்டும்.

இன்று இந்தநாட்டில், ஓர்ஆட்சிக்கு இருக்கக்கூடாத எந்த அயோக்கியத்தனமும், ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, புரட்டு, பித்தலாட்டம், மானங்கெட்டதனம், கட்சிக்குத் துரோகம் இழிதன்மையான சுயநலம், அபாண்டமாய்க்குறைகூறல் முதலிய கூடாஒழுக்கக் காரியங்கள் எந்தக்கட்சியில் - யாரிடம் இல்லாமல்இருக்கின்றன? இப்படிப்பட்காரியத்துக்காக யார்வெட்கப்படுகிறார்கள்?

இன்று அரசியல் கிளர்ச்சி என்றாலே காலித்தனம், அயோக்கியத்தனம், மோசடி, துரோகம் முதலிய தன்மைகள் இல்லாமல் யாரால் நடந்துகொள்ளமுடிகிறது?

முதலாவதாக, அயோக்கியத்தனத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இந்த தேசத்தில் எவன் ஒருவன் தன்நாட்டுக்குச் சர்வசுதந்திரம் கேட்கிறோனா அவன் ஏழு ஆண்டுகள் வரை தண்டிக்கத் தக்க குற்றவாளியாக ஆக்கப்படுவான்  என்ற சட்டம் உலகில் எந்த நாட்டில், தேசத்தில்இருக்கிறது?

அடுத்துச்சொல்கிறேன்,

எவனொருவன் தன்நாட்டுக்குத் தொண்டுசெய்ய, எந்த ஸ்தாபனத்தின் தேர்தலில் ஓர் அபேட்சகராக நிற்பதனாலும், அவன் பத்தாயிரம் ரூபாய் முதல் மூன்று இலட்சம் ரூபாய்வரையில் செலவு செய்துதான் வெற்றி, தோல்விஅடையமுடியும் என்ற நிலை எப்படி யோக்கியமான நிலையாகும்?

காலித்தனத்துக்குப் பெயர் வேலைநிறுத்தம்; அயோக்கியத்தனத்திற்குப் பெயர்அகிம்சை; சண்டித் தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரகம்! தான் பதவி பெற்ற கட்சிக்குத்துரோகம் செய்துவிட்               எதிர்க்கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள் எப்படி யோக்கியமாக இருக்கமுடியும்?

மற்றும் இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத்தனமான காரியம் விலக்கப்பட்டிருக் கிறது என்றுசொல்லமுடியும்?  இவைகள் ஒருபுறமிருக்க;

தேசத்துக்குப் பூரணசுதந்திரம் கிடைத்து. இன்றைக்கு 25 ஆண்டுகள் ஆனபிறகும், இந்தப் பூரணசுதந்திரம், உள்ள நாட்டில் 54 கோடி மக்களில் 39 கோடிப்பேர் தற்குறி என்றால் -100க்கு 70-மக்கள் கையெழுத்துப் போடத்தெரியாத தற்குறிகளாக இருக்கிறார்கள் என்றால்,  அதிலும் மொத்த ஐனத்தொகையில் சரிபகுதிப் பேர்களான பெண்கள் 100 க்கு 82 சதவீதம் தற்குறி என்றால், அதுவும் தேசம் பூரணசுதந்திரம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தநிலை என்றால் இதற்குப் பெயர் சுதந்திரஆட்சியா? அடிமைஆட்சியா? என்றுகேட்கிறேன்.

இதைச் சுதந்திரஆட்சி என்று- வயிற்றுப்பிழைப்பு, பதவிவேட்ேைதசியவாதிகளும், மக்களுந்தான், சொல்லிக்கொள்ள முடியுமேதவிர, நேர்மையான, அறிவுள்ள ஜனசமுதாயத் தான் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

இந்தநிலையில்,  இந்தநாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள் பல்லாயிரக்கணக் கான தேர்த் திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும், 5 வேளையும் ,பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்த தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? பிசாசுகள் - மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்தநாட்டில் சுதந்திரம் இருக்கிறதா, அடிமைத் தன்மைக்கு ஆதிக்கம் இருக்கிறதா என்றுதான் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

தவிர, இந்தச் சுதந்திரத்தின் காரணமாக இந்த நாட்மக்களுக்கு எவ்வளவு மானம், ரோஷம் இருக்கிறது என்றால், இந்த நாட்மனிதசமுதாயம் இருபிரிவாகப் பிரிந்து, ஒருபிரிவு நூற்றுக்கு 3 பேர் என்கிற பார்ப்பனர் - மற்றொரு பிரிவு 100 க்கு 97 பேரான சூத்திரர். பார்ப்பனர் என்றால் மேல்சாதி. சூத்திரன் என்றால் கீழ்சாதி (இழிமகன்) ஆவான்.

இந்தப்படியானநிலை, சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கிறது என்றால், இந்தத் தேசம் ஒரு சுதந்திரம் பெற்ற தேசம், –நாஆகுமா? அடிமைச்சாசனம் பெற்ற தேசம், நாடுஆகுமா?  இதற்கு மேலும் நம் சுதந்திரத்தை சுதந்திரநாள் விழாவைப் பற்றி விளக்குவது என்றால் நம்மனம் மிகுந்த பரிதாபப்படுகிறது, இரக்கப்படுகிறது.

தோழர்களே! இப்படிப்பட்ட நிலை பற்றி எந்தக் குடிமக்களாவது வெட்கப்படுதாக இருந்தால் அந்த வெக்கத்தைத் தமது சமுதாயத்திற்குக் கேடாகவும் தங்கள் சமுதாய உயர்வாழ்வுக்காகவே நடத்தப் பட்டுவரும் பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று உறுதிஎடுத்துக் கொள்வதன்மூலம் காட்டுங்கள் என்றுகேட்டுக் கொள்கிறேன். இதுதான் இன்று பொதுமக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளும்  (இன்ஜெக்ஷன்) செய்தியாகும். துக்கநாள் ஒழிக! உண்மைச் சுதந்திரநாள் தோன்றுக !

தோழர் பெரியார் - விடுதலை- 15.08.1972

 

Pin It