periyamuz-logo

விவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா.

நமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது?

ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.

ஆனால், அப்போது நிலம் வயலாக மாற்றப்பட் டிருக்கவில்லை. உழுவதற்கும் விதைப்பதற்கும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது. நிலங்களில் மரங்களும் பாறைகளுமே இருந்தன. பள்ளத் தாக்குகள், குன்றுகள் என்று ஏற்றத்தாழ்வான நில அமைப்பும் இருந்தது. மனிதர்கள் மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. ஏற்றத் தாழ்வான பகுதிகளைச் சமப்படுத்த வேண்டியிருந்தது.

மனிதர்கள் தங்கள் கடுமையான உழைப்பால் நிலத்தைப் பண்படுத்தினர். இப்படி மண்ணைப் பண்படுத்தி, உணவு உற்பத்தி செய்யும் முறையே விவசாயம். ஆதிகால விவசாயிகள் இயற்கையாக விளைந்த ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் இருந்து விவசாயத்துக்கு ஏற்றவற்றைக் கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பயிர் செய்து பெருக்கினர்.

இந்த வேலைகளைச் செய்வதற்கு மனித உழைப்பு மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமும் அறிவைப் பயன் படுத்தும் திறமையும் வேண்டியிருந்தது. விவசாயத்தை எளிமைப்படுத்தத் தேவையான கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது.

நிலத்திலிருந்து உணவுப் பயிர்களை விளை விக்கும் அறிவியல்தான் விவசாயம் என்று அறியப்படு கிறது. உலகில் அனைத்து நாகரிகங்களிலும் விவசாயத் துக்குப் பின்னரே எழுத்து கண்டுபிடிக்கப்பட் டிருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சி இயற்கையாக நடந்த ஒன்றல்ல; மற்ற அறிவியல் தொழில் நுட்பங்களைப் போல விவசாயமும் மனிதர்களின் கண்டுபிடிப்புதான்.

கி.மு. 2000க்கும் கிமு.3000க்கும் இடையே விவ சாயத்தையும் வீட்டு விலங்கு வளர்ப்பையும் சார்ந்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளைக் கல்லால் உருவாக்கினர். மரத்தாலும் தோலாலும் செய்யப்பட்ட கருவிகள் பின்னர் உருவாகின. அதற்குப் பிறகு இரும்பாலும் மற்ற உலோகங் களாலும் விவசாயக் கருவிகள் செய்யப்பட்டன.

விவசாயத்துக்கு இந்தியாவில் நீண்ட வரலாறு உண்டு.

மேய்ப்பவர்கள் விலங்குகளைப் பழக்கி வளர்க்கத் தொடங்கியபோது இறைச்சியும் பாலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களும், தோல் மற்றும் கம்பளி போன்ற மற்றப் பயன்பாட்டு பொருள்களும் கிடைத்தன. அதே நேரத்தில் காளைகளும் எருமைகளும் உழவுக்கும் வண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்டன.

ஐரோப்பாவில் குதிரைகளைக் கொண்டு உழுதனர். இந்தியர்களோ இந்தக் கடினமான வேலைக்கு மாடுகளைப் பழக்கினர். வண்டி இழுக்க ஐரோப்பாவில் குதிரைகளும் இந்தியாவில் மாடுகளும் உதவின. குதிரைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.

இறக்குமதியான குதிரைகள் மீது சவாரி செய்த படைவீரர்களும் தேரோட்டிகளும் இன்றும் புகழப்படுகின்றனர். ஆனால், மாடுகளை நுகத்தில் பூட்டி உழுத உழவர்களுக்கு இன்றைக்கு மதிப்பில்லை. நிலத்தை உழுது உணவு தந்த சாதியினரும் சமூகக் குழுக்களும் ‘சூத்திரர்’ என்று அழைக்கப்பட்டுச் சமுதாயத்தின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டனர். பண்டிதர்கள் (பார்ப்பனர்கள்) எனப்பட்டவர்கள் விவசாய வேலையை அறிவிலிகள் செய்யும் தொழிலாகக் கருதினர். பயிர்களை உணவாக மாற்றியவர்களுக்கு, அவர்களது மனசில் மரியாதை இல்லை. நிலத்திலிருந்து உணவு தயாரிக்கிற உழைப்பையும் அது சார்ந்த திறன்களையும் மதிக்காத மதமும் தத்துவமும் ஒரு சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை அழித்துவிடும்.

யாகத்தில் கொல்லப்பட்ட மாடுகள்

தொடக்கத்தில் விவசாய வேலைகள் அனைத்தையுமே மனிதர்களே முழுமையாகச் செய்து வந்தனர். கவுதம புத்தர் வாழ்ந்த காலத்தில் விலங்குகள் விவசாய வேலைகளுக்குப் பழக்கப்பட்டன. இது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. அதே நேரம், கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் வேத யாகச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. பவுத்தர்களின் ஆதரவுடன் இந்த யாகப் பலிகளை விவசாயிகள் எதிர்த்தனர். மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவதையும் பால் பொருள்களின் உற்பத்திக்காக வளர்ப்பதையும் பவுத்த மதம் ஊக்குவித்தது.

இன்று விவசாயம் ஓர் அறிவியலாக அறியப்பட்டுப் பல்கலைக் கழகங்களில் பாடமாக இருக்கிறது. ஆனால் விவசாயிக்கு காலங்காலமாக நிலத்தை எப்போது, எப்படிப் பண்படுத்துவது என்று தெரிந்திருந்தது. கட்டாந்தரையில் மாடுகளை ஏரில் பூட்டி உழுவதற்குக் கடுமையான பயிற்சி தேவை. பல தலைமுறைகளாக விவசாயிகள் தங்கள் சந்ததிகளுக்கு இதுபோன்ற திறமைகளைப் பயிற்றுவித்து வந்தனர்.

அதே நேரம் அந்த விவசாயிகளின் குழந்தை களுக்குப் பள்ளிகளில் படிக்கப் பல நூற்றாண்டு களாக அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தடை செய்யப்பட்டன. விவசாய வேலைகளில் பெற்றோர் தந்த பயிற்சி மட்டுமே அவர்களுக்குக் கல்வியாக இருந்தது. விவசாயிகளுக்கு எழுதவோ, படிக்கவோ முடியாததால் அவர்களது பாரம்பரிய அறிவு, அறிவாக மதிக்கப்படவில்லை.

வயலை உழுவற்கு அறிவும் திட்டமிடும் திறனும் தேவை. கடலை விதைக்கும்போது ஆழ உழுத சால் (கரசசடிற) அவசியம் என்று விவசாயிகளுக்குத் தெரியும். பச்சைப் பயிற்றுக்கு அவ்வளவு ஆழமான சால் தேவையில்லை. அதேபோல, பருவத்துக்கு உகந்த பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்ய வேண்டும்.

விவசாயிக்குத் தன் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை தெரியும். தான் பழக்கும் விலங்குகளின் இயல்பு தெரியும். உடலும் மனமும் சார்ந்த திறன்களை விவசாயம் ஒருசேரப் பயன்படுத்துகிறது. சொல்லப்போனால், எல்லா உடல் உழைப்புக்கும் மூளை உழைப்பும் அவசியம் தேவை. ஆனால், மூளை உழைப்புக்கு உடல் உழைப்புத் தேவையில்லை.

விவசாயிகள் பல்வேறு பயிர்களைக் கவனமாகப் பயிரிட்டு, அறுவடை செய்திருக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பட்டினி கிடந்திருப்போம்.

விவசாயிகளும் அவர்களுடன் வயல் வேலை செய்பவர்களும் சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறியப்படுகிறார்கள். இவர்களும், தலித்துகளும், பழங்குடியினரும்தான் நிலத்தைப் பண்படுத்தி நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுடைய உழைப்பில் விளைந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அவர்களை மதிக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும்?

Pin It

சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள்என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ்மறை! அந்தப் பாடல்களை நியாயமாக தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்கவேண்டும் அல்லவா? ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்றுஅதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்துகரையானுக்கு ‘அமுது’ செய்தனர்.

அந்தக் காலங்களில் எழுத்துக்கள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில் தானே?ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல சந்தையில் கிடைக்கக் கூடியதும் அல்ல.கோயில்களிலும், மடங் களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப் பற்றாளர் களிடம் மட்டுமேகிடைக்கக் கூடியவையாகும். அவை முழுமையாகக் கிடைப்பது முற்றிலும் அரிது. தேவாரப்பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால்தில்லைவாழ் அந்தணர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை. தேவாரப் பாடல்களைக்கேட்டு ரசித்த ராஜராஜ சோழன் அப்பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்பொறுப்பை நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்தான். எல்லாப் பாடல்களும் சிதம்பரம்கோயிலில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்த சோழ மன்னன்தில்லைவாழ் அந்தணர்களை தேவாரப் பாடல்களை விடுவிக்கு மாறு கேட்டான். தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்துவிட்டனர். சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் வந்து கேட்டால்தான்கொடுக்க முடியும் என்று ஆளும் மன்னனுக்கே போக்குக் காட்டினர். ராஜராஜன்தில்லைவாழ் அந்தணர்கள் செய்யும் தந்திரங்களைப் புரிந்து கொண்டான். சம்பந்தர், அப்பர்,சுந்தரர் போல் சிலைகள் செய்து, தில்லைவாழ் அந்தணர்கள் முன் நிறுத்தி தேவாரப்பாடல்களைக் கேட்டான். “இவை எல்லாம் சிலை தானே” என்றார்கள் கோயில் அந்தணர்கள்.ராஜராஜசோழன் பதில் சொன்னான். “நடராசரும் சிலை தானே?” பிறகு என்ன, அவன்அரசனாக நடந்து கொண்டான். தேவாரப் பாடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையைஉடைத்தான். பாடல்களை வெளிக் கொணர்ந்தான்.

தில்லைவாழ் அந்தணர்களுக்கு என்ன ஆணவம் இருந்திருக்க வேண்டும்? ஆளும் அரசனின் கிரீடத்திற்கு மேலே தில்லை வாழ் அந்தணர்களின் ஆன்மிகக் கொடி பறந்திருக்க வேண்டும்அல்லவா?

அன்று ராஜராஜசோழன் கரையான் உண்டது போக எஞ்சிய தேவாரப் பாடல்களைமீட்கவில்லை என்றால், கோயில்களில் பாடுவதற்குக்கூட தமிழ் இல்லாது போயிருக்கும்!

இங்கே தமிழ்த் திருமுறைகள்

தீட்டு மொழி!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமுடி மூலை என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்ஆறுமுகசாமி என்ற ஓதுவார். இவருக்கு வயது 73. தில்லை நடராசர் கோயிலில் சிற்றம்பலமேடையில் திருவாசகம் உள்ளிட்ட சிவபுராணப் பாடல்களை அவர் பாட விரும்பினார். “பாடக் கூடாது” என்று தீட்சிதர்கள் தடுத்தனர். தடுத்தது மட்டும் அல்ல தாக்கியும்இருக்கிறார்கள். ‘அன்பே சிவம்’ என்ன ஆயிற்று? வயதுக்கு உரிய மரியாதை எங்கேபோயிற்று?

ஆறுமுகசாமிக்கு ஆதரவாகப் போராட்டம் வெடித்தது! தீட்சிதர்கள் ரொம்பசாமர்த்தியசாலிகள். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடுவதை எதிர்க்கவில்லையாம்.பாடுகின்ற இடம் சிற்றம்பல மேடையாக இருக்கக் கூடாதாம். அதாவது சிற்றம்பல மேடைஎன்பது மூலவர் (நடராசர்) சந்நிதியாம் அங்கு வடமொழி வேதங்கள் ஒலிக்கலாமாம்.அந்தணர்கள் மட்டுமே அதைச் செய்வார்களாம். மூலவர் சந்நிதியில் திருவாசகம் ஒலித்தால்தீட்டுபட்டு விடுமாம்!

என்ன, நாம் இருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டா?

தமிழ் செம்மொழி ஆகிவிட்டதாம்! மத்தியிலும் தமிழ் வேண்டுமாம்! உயர்நீதிமன்றத்திலும்தமிழ் உட்கார வேண்டுமாம்! திருக்குறள் தேசிய நூலாக வேண்டுமாம். ஆனால் தில்லைக்கோயிலில் திருமுறை தீட்டு மொழியாம். தமிழுக்கு இடஒதுக்கீடு உண்டாம். இடம்சிற்றம்பல மேடைக்குக் கீழே.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் அத்தோடு நிற்கவில்லை. நீதிமன்றத்திற்கும் சென்றார்கள்.சிதம்பரம் நகரில் உள்ள மாவட்ட உரிமையியல் (ஆரளேகை உடிரசவ) நீதிமன்றத்தில்ஆறுமுக சாமிக்கு எதிராக கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் அதன் செயலாளர் நவமணிதீட்சிதர் வழக்கு தாக்கல் செய்தார். ஆறுமுக சாமியோ அவருடைய ஆட்களோ நடராஜர்ஆலயத்தின் உள்ளே கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில், அதாவது சிற்றம்பலமேடையில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற சிவபுராணங்களை பாடக் கூடாது என்றுஉறுத்துக் கட்டளையை (ஐதேரnஉவiடிn) அவ்வழக்கில் கேட்டார். தீட்சிதர்களின் “வைதீகசாஸ்திரங்களிலோ மதச் சடங்குகளிலோ, உரிமைகளிலோ இந்தப் பிரதிவாதி(ஆறுமுகசாமி) தலையிட உரிமை இல்லை. இந்து அறநிலையத் துறையின் மயிலாடுதுறைஉதவி ஆணையர் 12.12.2004-லேயே ஆறுமுகசாமியோ அல்லது வேறு வழிபாடு செய்யவிரும்பும் யார் வேண்டுமானாலும் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைக் கருவறைக்குமுன்புள்ள கீழ்ப்பகுதியில் நின்று பாடலாம். அதாவது சிற்றம்பலத்தில் பாட முடியாது. (திருச்சிற்றம்பல மேடை என்றாலும், கனகசபை என்றாலும், அர்த்தமண்டபம் என்றாலும்எல்லாமும் ஒன்றுதான்) பூஜை நேரத்தில் தீட்சிதர்கள் தேவாரம் பாடுவார்கள். மற்றவர்கள்பாடக் கூடாது. தொன்று தொட்டுவரும் வழக்கத்திலும், வழக்காற்றிலும் குறுக்கிடயாருக்கும் உரிமை இல்லை. ஆறுமுகசாமிக்கு மயிலாடுதுறை உதவி ஆணையர்உத்தரவின் பேரில் எந்த மேல்முறையீடு செய்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அப்பர்,சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலியோர்கூட கருவறைக்குக் கீழ் இருந்த பகுதியில்இருந்துதான் பாடினார்கள். இதை மீறினால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும். தில்லைவாழ்தீட்சிதர்கள் தமிழர்கள், சிதம்பரம் கோயில் தில்லைவாழ் தீட்சிதர்களின் நிர்வாகத்திற்கேஉட்பட்டது” - இவை எல்லாம் தீட்சிதர்களின் வாதங்கள்.

ஆறுமுகசாமி ஓதுவார் வாதம் என்ன தெரியுமா?

தீட்சிதர்கள் தங்களுக்கு ஆதரவாக இந்து சமய அறநிலையத் துறை மயிலாடு துறை உதவிஆணையர் போட்ட உத்தரவைக் காட்டுகிறார்கள். இது தங்கள் கோயில் என்றும் இந்து சமயஅறநிலையத் துறை இதில் தலையிட முடியாது என்றும் சொல்பவர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரியின் உத்தரவைக் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. அந்த அதிகாரியின்உத்தரவு இறுதியானது அல்ல. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்தப் பழக்க வழக்கமும்இருக்க முடியாது. சிவபுராணம் பாடும் உரிமை சாதி அடிப்படையில் மறுக்கப்படுகிறது. இந்தவழக்கில் இந்து சமய அறநிலையத் துறையையும் ஒரு தரப்பாகச் சேர்த்திருக்க வேண்டும்.இது ஒரு சட்டத் தவறு. தீட்சிதர்கள் தேவாரம் பாடலாம்; ஆனால் அதே இடத்திலிருந்துஓதுவார் பாடக் கூடாது என்பது சாதி அடிப்படையிலான வாதமாகும். அனைத்துசாதியினரும் அர்ச்சகராக அரசு சட்டம் கொண்டுவந்த பின்னர் தீட்சிதர்கள் தனி உரிமைகொண்டாட முடியாது என்பது ஆறுமுக சாமியின் வாதம்.

சைவ-வைணவ மோதல் களம்

சிதம்பரம் கோயில் எப்படி ஏற்பட்டது, நடராசர் எப்படி எழுந்தருளினார் என்பதே பிரச்சினைக்குரியதாகத்தான் இருக்கிறது. இவை குறித்து சரியான வரலாறு இல்லை.புராணக் கதைகளே முன் வைக்கப்படுகின்றன. புராணக் கதைகள் பக்தர்களுக்கு இனிக்கலாம். வரலாற்று மாணவனுக்கு உண்மைதான் இனிக்கும். புராணக் கூற்றின்படிசிம்மவர்மன் என்ற கவுட நாட்டு மன்னன் தன்னுடைய உடல் குறை காரணமாக முடிசூட்டிக்கொள்ள மறுத்துவிட்டு, காடாக இருந்த சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்த சிவகங்கைகுளத்தில் நீராடிவிட்டு எழுந்தபோது, நடராஜர் அவன்முன் தோன்றினாராம். சிம்மவர்மன்என்ற தன்னுடைய பெயரை இரண்யவர்மன் என்று மாற்றிக்கொண்டு, தன் முன் தோன்றியநடராசனுக்கு அவன் அங்கு கோயில் கட்டினானாம். சிதம்பரம் கோயில் இப்படித்தான்தோன்றியதாம். கங்கைக் கரையிலிருந்து தீட்சிதர்களை அழைத்து வந்தானாம்.

சிதம்பரம் கோயில் வளாகத்தில் இப்போதும் ஒரு பெருமாள் கோயில் உண்டு. இது குறித்துசைவர்கள் பேசுவதில்லை. வைணர்கள் ஒரு தகவல் சொல்கிறார்கள். ஒரு காலத்தில்பெருமாள் கோயில் அங்கு இருந்தது என்றும், அது ‘சித்ரக் கூடம்’ என்று அழைக்கப்பட்டதுஎன்றும், அப்போது நடராஜர் கோயில் சிறிய கோயிலாக இருந்தது என்றும், அதனால்தான்நடராஜர் வீற்றிருக்கும் சந்நிதி “சிற்றம்பலம்” என்று அழைக்கப்படுகிறது என்றும்கூறுகிறார்கள். பல ஆழ்வார்கள் சிதம்பரம் பெருமாளைப் பாடியிருக்கிறார்கள். இப்படிப்புராணக் கதைகளிலும் சைவ வைணவர்களுக்கிடையே சிதம்பரம் கோயில் ஒருபிரச்சினைக்குரிய கோயிலாகவே இருந்திருக்கிறது. சிதம்பரம் கோயில் வளாகத்தில்பெருமாள் கோயில் வந்தது எப்படி? பல்லவர் ஆட்சியில் கிட்டத்தட்ட எட்டாம் நூற்றாண்டில்நந்திவர்ம பல்லவ மன்னன் நடராஜர் ஆலயத்தில் பெருமாளை பிரதிஷ்டைசெய்திருக்கிறான் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதாவது தேவாரம் பாடிய மூவர்காலத்திற்குப் பிறகு என்கிறார்கள்.

இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில், இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம், இன்னும் இதுபோன்ற கோயில்கள் போல், கட்டப்படும்போதேபிரம்மாண்டமாய்க் கட்டப்பட்ட கோயில் அல்ல சிதம்பரம் நடராஜர் கோயில். அக்கோயில்பல்வேறு அரசர்களால், பல்வேறு காலங்களில் பெரிதாக்கப்பட்டிருக்கிறது. பிற்காலச்சோழர்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில் சிதம்பரம் கோயில். சைவ சமய மன்னர்கள்மட்டும் அல்ல, வைணவ சமய மன்னர்களும், இக்கோயில் வளாகத்தில் தங்கள் ஆட்சியின்பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்படிச் சைவ மன்னர்களும், வைணவ மன்னர்களும்தங்கள் ஆட்சியின் இருப்பை இத் தில்லை வளாகத்தில் காட்டியதால் தானோ என்னவோ,பிரச்சினைகளின் திருத்தலமாக இக்கோயில் தொடர்ந்து இருந்திருக்கிறது.

நடராசர் கோயில் வளாகத்தில் உள்ள திருச்சித்ரகூடம் திருமால் (வைணவக் கடவுள்)வீற்றிருக்கும் கூடம். ஆழ்வார்களின் பாடல் பெற்ற கோயில். இந்தக் கோயிலுக்குபன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோதனை ஏற்பட்டது. தில்லை நடராசன் வளாகத்தில்திருமால் கோயிலா? கொதித்து எழுந்தான் இரண்டாம் குலோத்துங்கன். சித்ர கூடத்தைஅழித்தான். கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசினான். நானூறு ஆண்டுகள்ஓடின. தில்லைக் கோயிலுக்கு உரியவர் நடராசர்தான் என்று மாற்றினார்கள்! பிற்காலச்சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் விஜயநகர வேந்தனான அச்சுததேவ மகாராயர் என்னும்மன்னன் கோவிந்தராஜ பெருமாளை ‘புனப்பிரதிஷ்டை’ செய்திருக்கிறான். இந்த மன்னன்ஆந்திரத்தின் புகழ் பெற்ற அரசனான கிருஷ்ண தேவராயனின் இளவலாகும். இதன் பின்னர்நடராஜர் கோயிலின் முதல் பிராகாரத்திலேயே கோவிந்தராஜ பெருமாள் தனிக் கோயில்அமைக்கும் முயற்சி நடந்து, அதை எதிர்த்து தில்லை வாழ் அந்தணர்கள் கோயில்கோபுரத்தில் ஏறி, இருபதுக்கும் மேற்பட்டோர் தற்கொலையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நன்றி : ச.செந்தல்நாதன் எழுதிய “சிதம்பரம் கோயில்: சில உண்மைகள்” நூலிலிருந்து

Pin It

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன.

பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது. அதில் சட்டங்கள் குறுக்கிடுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்காது. 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ‘ஓர் பால்’ வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கை இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கேள்விக்குறியாகியுள்ளது.

ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறைக்குள்ளும் காவல்துறை நுழைந்து, அங்கே “இயற்கைக்கு” மாறான உடல் உறவுகள் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்கக்கூடிய ஒரு சட்டம், ஒரு நாட்டில் இருப்பது அந்த நாட்டுக்கே தலைகுனிவு! தீர்ப்பை எழுதிய நீதிபதிகள், மதவாதப் பழமைவாதிகளாகவே மாறிப் போயிருக் கிறார்கள் என்பதுதான் வேதனை! ‘இத்தகைய ஓர்பால் உறவுக்காரர்களை உயிரோடு எரிக்க வேண்டும்’ என்று 1300 இல் பிரிட்டனில் சட்டம் இயற்றப்பட்டதையும்,  ‘சமூகத்துக்குப் பயன்படாதவர்கள்’ என்ற மதவாதிகள் கருத்தையும் தீhப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

பாரதிய ஜனதா - இயற்கைக்கு மாறான உறவுகளை ஏற்க மாட்டோம் என்று கூறுகிறது. அப்படியானால் இந்துக் கடவுளர் களின் இயற்கைக்கு மாறான உறவுகளைத்தான் (அய்யப்பன் உட்பட) புராணங்களும், இதிகாசங்களும் கதை கதைகளாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கற்பனைகளை விமர்சித்தாலே இந்துக்களின் மனம் புண்படுகிறது என்கிறார்கள். ஒரு பக்கம் தங்கள் கடவுள்களின் இயற்கைக்கு மாறான உறவுகளை புனிதமாக வணங்கிக் கொண்டு, சமூகத்தில் மட்டும் அதை ‘பாவமாக’க் கருதுவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

‘திருமணம்’ என்ற அமைப்பு முறை நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஆணாதிக்கத்தின்கீழ் அடைபட்டுக் கிடக்க விரும்பாத உரிமைகளை நேசிக்கும் பெண்களும், ‘குழந்தைப் பேறு’ என்ற அடிமைத்தளையிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்பும் பெண்ணியவாதிகளும், ‘பெண்-ஆண்’ கட்டாயத் திருமணத்திலிருந்து விடுபட்டு, தங்களுக்கு விருப்பமான திருமண உறவுகளை தேர்வு செய்கிறார்கள். இதில் சட்டங்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?

ஓரின உறவை எதிர்க்கத் தேவையில்லை என்று கத்தோலிக்கர்களின் மதத் தலைவர் போப் கூறியிருப்பதோடு, அய்.நா.வின் 94 உறுப்பு நாடுகள் இதை ஏற்றுக் கொண்டுள்ளன.

திருமணம் என்பது மாறுதலுக்கு உட்பட்டது என்று பெரியார் கூறுகிறார். அதையும் தாண்டி, இந்த உடலுறவு முறை குறித்தும் பெரியார் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“கலவி முறை என்பதும், சொத்து முறை என்பதும் பெரும்பாலும் தேசாச்சாரம், மதாச்சாரம் அல்லது சாதியாச்சாரம், பழக்க வழக்கம் முதலியவற்றைப் பொறுத்து இருக்கிறதே தவிர, வேறு நியாயமான நிர்ப்பந்தமான உலகெங்கும் ஒரே வழி துறையான காரண காரிய முறை கிடையாது” (குடிஅரசு 2.6.1945) என்கிறார்.

இதேபோல், ‘ஒழுக்கம்’ என்பதற்கான வரையறைகளும் மாற்றத் துக்குள்ளாகியே தீரும். மனித சமுதாயத்துக்கும், சமூக சமத்துவத்துக்கும் ஏற்புடையதாகவும், மற்றவர்களுக்கு தொல்லை தராததும், உதவு வதும்தான், சுயமரியாதைக்காரர்களுக்கான ஒழுக்கம் என்று பெரியார், ‘ஒழுக்கத்துக்கான’ உள்ளடக்கத்தை மறுவரையறை செய்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள் மாற்றப்பட வேண்டும். 153 ஆண்டுகளாக 377 ஆவது சட்டப் பிரிவு அமுலிலுள்ள இந்த நாட்டில் இந்தச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை ஒருவர் கூட ஆயுள் தண்டனைப் பெற்றதில்லை என்பதிலிருந்தே இந்தச் சட்டம் செயலளவில் தோற்றுப் போய் நிற்கிறது என்பது விளங்கும்.

தனி மனித உறவுகளை சமூகத்திற்கு பாதிப்பின்றி தீர்மானித்துக் கொள்ளும் உரிமைகளை அங்கீகரிப்பதுதான் ஒரு நாகரிக சமுதாயத்துக்கான அடையாளம்!

Pin It

தில்லை நடராசன் கோயில் நிர்வாக உரிமையை தீட்சதப் பார்ப்பனர்களிடம் மீண்டும்ஒப்படைத்து விட்டது உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியும் இதற்குமறைமுகமாக உதவியிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக்கோயில் களும் கொண்டு வரப்பட்டாலும், தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், வழிபாடுஇரண்டையும் பார்ப்பனர்களிடமிருந்து பறி போய்விடக் கூடாது என்று துடிக்கிறார்கள். 2014ஆம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், கடந்த நூற்றாண்டுகளில் பார்ப்பனர்களின் ‘கோரத்தாண்டவம்’ எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்த நிலையில்தில்லை நடராசன் கோயில், பெண்ணடிமை - வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டையாகவும்,சைவ வைணவ மோதல் களமாகவும் இருந்து வந்துள்ளதற்கான வரலாற்றுத் தகவல்களைஇங்கு வெளியிடுகிறோம்.

சைவத்தின் பெருமை பேசும் தில்லை நடராசன், தன்னுடன் போட்டிக்கு வந்த பெண்தெய்வத்தை எப்படி சூழ்ச்சியில் வெற்றி பெற்றான் என்பதைக் கூறுகிறார் அக்னி ஹோத்திரம்இராமானுஜ தாத்தாச்சாரி.

சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சில பேர் அவரதுஆலயத்துக்கு சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள். இந்த ஸ்தலத்துக்கு விசேஷமேசிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம்தான்.

ஒருநாள்... மிகப் பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி... கலந்து கொள்பவர்கள் யார், யார்? பரமசிவன், தில்லை காளி.

யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப் போட்டி போட வந்தவள். மிகச் சிறந்தநர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்கள்தான் நடனஅசைவுகளிலும், இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள்.

புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையைவிட ஸ்தீரிகள் நர்த்தனமாடும்போது அதிகபட்சஅழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும்... தில்லை காளி நடனப் பயிற்சிபெற்றவள். பின் சொல்ல வேண்டுமா? அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப் போகும்.அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப் போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெரு மானின் நடனப்போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள்நடந்தன. இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில் தான் சிவபெருமானும் காளியும் நடனமாடவேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார்ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு பேச்சு நுழைந்து நெளிந்துகொண்டிருந்தது. தொடங்கியாகிவிட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆடஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியாடு சுருதி சேர்த்தன. காளியின்கை விரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித் தார். சிவனின் தாண்டவத்தை ஐந்துவகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம்,ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம். இங்கே சிவன் ஆடியது, ஆனந்ததாண்டவம்.

காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங் களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின்தாண்ட வம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை... பார்த்தார்சிவபெருமான். ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா? அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா... சிவபெருமானை தில்லை காளி ஜெயித்து விட்டாளே’ எனகுரல்கள் கிளம்பப் போகிற நேரம்... இனியும் இவளை ஆடவிடக் கூடாது என முடிவு கட்டியசிவன்... தன் இடதுகாலை சற்றே தூக்கினார். நடனத்தின் ஒரு வகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக் கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடதுகால் இன்னும் எழும்பியது.ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச்சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது. வலதுகாலை ஊன்றி இடதுகாலை உயரவிலக்கிக் கொண்டே போக... சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்? வேண்டுமென்றேசிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத்தான்இடதுகாலை விலக்கி தூக்கி யிருக்கிறார் சிவன்.

வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண் டிருந்த தில்லை காளி, இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது.தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொருபெண் பார்த்துக் கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா?நிறுத்தப்பட்டது. ஆனால், சிவபெருமான்... தொடர்ந்து தாண்டவ மாடிக் கொண்டே இருந்தார்.ஆக... சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது.

வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை வெளிக்கொண்டுவந்து... ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? ‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்குநடராஜன் என்னும் நாமமே உண்டானது. இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதைநானாக சொல்ல வில்லை. “நடராஜ மகாத்மியம்” என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன?

ஆணிடம் பெண் போட்டி போடக் கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும்ஜெயித்துவிடக் கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தோற்றவள் காளி. காளி... ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான்முக்கியமான இன்னொன்றை கவனிக்க வேண்டும். “ளுiஎய ளை ய hiபா ஊடயளள ழுடின.ரெவ முயடi ளை ய டடிற உடயளள சரசயட ழுடின” என்று காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்றுகேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள். கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாகஉட்கார்ந்திருப்பாள் காளி.

‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான்விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள் காளி. இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும்தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்-பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட் டிருக்கிறது. அதோடு வர்க்க பேதமும்பின்பற்றப்பட் டிருக்கின்றன - என்று எழுதியுள்ளார் அக்னி ஹோத்திரம் ராமானுஜதாத்தாச்சாரி.

(நன்றி: ‘இந்து மதம் எங்கே போகிறது?’ நக்கீரன் வெளியீடு)

Pin It

(14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம்)

‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை எளிதில் பெறுவதற்கான வாய்ப்பு என்று வெளியில் கூறப்பட்டாலும் இதன் அடிப்படையான நோக்கமே ஒவ்வொருவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்துவதுதான்.

2006 ஆம் ஆண்டு மத்திய திட்டக்குழு, அங்க அடையாளங்களுடன் கூடிய ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை எடுக்கும் திட்டத்தை முன்வைத்து மத்திய தகவல் ஆணையம் வழியாக ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிட்டார்கள். பிறகு 2009 ஆம் ஆண்டில் இதற்காக ஒரு தனி ஆணையத்தை உருவாக்கினார்கள். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய நந்தன் நிலகேணி என்பவர் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். மத்திய அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டு, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றும் அவருக்குக் கீழே ஆலோசனை கூற உருவாக்கப் பட்டது.

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம் அகதிகள், இந்த அட்டையைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்களா வதற்கு முயற்சிப்பதாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வழியாகவே இதை அமுல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதைத் திட்டக் குழு துணைத் தலைவராக இருநத மாண்டே சிங் அலுவாலியா எதிர்த்தார். இருவரும் வெளிப்படையாகவே மோதிக் கொண் டனர். பிறகு 2012இல் ஒரு முடிவு செய்யப்பட்டது. 60 கோடிப் பேர் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வழியாகவும் 60 கோடிப் பேர் ஆணையத்தின் வழியாகவும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இந்தப் பணி மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையின் கீழ் வந்தது.

இந்தியாவில் சட்டவிரோதமாக அகதிகள் குடியேறுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதை அமைச்சர்கள் குழுவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் 2002 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியிலேயே ‘பல்நோக்கு தேசிய அடையாள அட்டை’ என்ற பெயரில் இதைத் தொடங்க முடிவு செய்தார்கள். 1999 ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பிறகு, நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், உளவு அமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. அமைச்சரவை பரிந்துரைத்தது. இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குனரான ஏ.கே.டோவல் என்பவர் அப்போதே இத்திட்டத்தின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். நாட்டின் சட்ட விரோத சக்திகளையும் அந்நியர் ஊடுருவலையும் அடையாளம் காண வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், ஆனால், மக்கள் நலத் திட்டங்களுக்காகவே இத்திட்டம் என்று கூறினால்தான் மக்கள் ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், இத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். தேச முன் னேற்றம் என்பதன் பெயரில் தனிமனித சுதந்திரத்தை விலைபேச முடியாது என்று அவர் கண்டித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு பல் வேறு துறைகளிடமிருந்து நேரடியாக தகவல்களைப் பெறக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த ஆணையத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட் டிலுள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம், உயர்நீதிமன்றத்திலும் விக்ரம் கிருஷ்ணா என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்திலும், 2012இல், கர்நாடக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி புட்டசாமி என்பவர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந் தனர். புட்டசாமி தமது மனுவில் சட்டவிரோதமாக முஸ்லிம் அகதிகள் ஊடுருவி விடுவார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தையே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே ஆதார் அட்டையை கட்டாயமாக்கிய மகாராஷ்டிரா மாநில அரசு நீதிபதிகளேயானாலும், ஆதார் அட்டை இல்லாமல் ஊதியம் வாங்க முடியாது என்று அறிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்தப் பின்னணியில் ஆதாருக்கு இடைக்காலத் தடையை பிறப்பித்தது.

எரி வாயு, உணவுப் பொருள்களுக்கான மான்யங்களை ரொக்கமாக வழங்குவதாகக் கூறும் இத்திட்டத்தின் நோக்கத்தில் இரண்டு ஆபத்துகள் அடங்கியுள்ளன. பொருட்களை வெளிச் சந்தையில் வாங்குவதற்கு கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருள்களின் விலை நிர்ணயம் சந்தைக் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவரப்படுகின்றன. இரண்டா வதாக, ரேஷன் கடைகள் இழுத்து மூடப்படுவதற்கும் வழியமைக்கப்படுகிறது. நீண்டகாலமாக உலகவங்கி இதைத்தான் வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் நந்தன் நீலகேணி தெரிவித்துவரும் கருத்துகள் அதிர்ச்சி யூட்டுபவையாகும். கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் அவர் பேசினார். அப்போது வட அமெரிக்கக் கண்டத்துக்கு பிழைப்புக்காக வந்த அய்ரோப்பியர்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். கனடா நாட்டில் எல்லீஸ் தீவுக்கு வந்த அய்ரோப்பியர்களை - குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் தங்கள் பெயரை உச்சரித்தனர். அப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள், அவர்களின் தாய்மொழிப் பெயர் அனைத்தையும் நீக்கிவிட்டு, அதிகாரிகளே, ஒரு பெயரை சூட்டி, இனி இதுதான், இந்த நாட்டில் உனக்கான பெயர் என்று அறிவித்தார்கள். நந்தன் இதை நினைவு கூர்ந்து, “ஆதார் - உலகின் மிகப் பெரும் பெயர் சூட்டுவிழா; 21 ஆம் நூற்றாண்டின் எல்லீஸ் தீவு” என்றார். பெயர், இனம், மொழி, தொழில் அடையாளங்களைவிட ஒரு மனிதன் என்ற முறையில் உடலின் தனித்துவமான அடையாளங்கள் பதிவு செய்யப்படும் திட்டமாகும். சோதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் வந்தால், இந்த ‘பயோ மெட்ரிக்’ அளவீடுகளைக் கொண்ட உடலமைப்பைக் கொண்ட மனிதன் நான்தான் என்பதை ஒவ்வொரு வரும் நிரூபிக்க வேண்டும்.

விழிப்பாவை, கைரேகைகளில் மாற்றம் வந்தால், அடையாளங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையத்தின் விதி கூறுகிறது. மாட்டுக்கு சூடு வைப்பதைப் போன்ற அடையாளம் இது. இது ‘ஒற்றைத் தேசிய அடையாளம்’ என்று பெருமையுடன் கூறுகிறார் தேசிய புலனாய்வு வலைப் பின்னலின் தலைவர் ரகுராமன். உள்நாட்டு பாதுகாப்புகளைக் கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட உளவுத் தகவல் வலைப்பின்னல் அமைப்பு இது.

அனைவரின் தொலைபேசி, இணைய சேவை, ரயில்-விமானப் பயணத் திட்டங்கள், கடன் அட்டைகள், வீடு-நிலப் பத்திரங்கள், ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆதாருடன் இணைக்கப்படவுள்ளன.

கிராமப்புற மக்களின் சேமிப்புகளையும் வங்கிகளை நோக்கி இழுத்து, உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை அழித்து, தேசிய நுகர்வுச் சந்தையுடனும் வங்கிக் கடன் சந்தையுடனும் கிராம மக்களை இணைப்பதும் இத் திட்டத்தின் மற்றொரு நோக்கம். கிராம மக்கள் சட்டிப் பானைகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புகளை வங்கிக்குக் கொண்டுவரவேண்டும் என்கிறார், ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன்.

வங்கிகள், கிராமங்களில் கிளைகளைத் திறக்காமல், முகவர்களை கிராமங்களுக்கு அனுப்பி, அவர்களிடம் அட்டைகளை ‘ஸ்வைப்’ செய்யும் கருவிகளை வழங்கி, நடமாடும் வங்கிகளாக மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஆதார்’ பணிகளில் அமர்த்தப்பட்ட அமைப்புகள், இந்தியாவில் திரட்டப்பட்ட ஒவ்வொரு குடிமகன் பற்றிய தகவலையும் அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’வுக்கு அனுப்பி வைக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிவந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த ஆபத்தை சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஜெர்மனியில் இட்லர் ஆட்சியில் யூதர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி, இட்லரின் இனப்படு கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்படும் நிறுவனம் அய்.பி.எம். அமெரிக்க இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள மற்றொரு நிறுவனம் ‘எல்.ஒன் சர்வீசஸ்’. முன்னாள் அமெரிக்க உளவுத் துறை நிர்வாகிகளைக் கொண்டு செயல்படுவது ‘அசென்ச்சர்’ என்ற நிறுவனம். இந்த நிறுவனங்கள் வழியாகத் தான் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவை எதிர்க்கும் கிரீஸ், எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டைகள் அமெரிக்க அரசிடம் வந்து சேர்ந்துவிட்டன என்பதை ‘விக்கி லீக்ஸ்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்க மாநில ஆட்சி சட்டசபை தீர்மானத்தின் வழியாக ஆதார் அட்டைக்கு மாநிலத்தில் தடை விதித்துவிட்டது.

அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் உறுதி செய்யப்படுகின்றன. அங்கே வழக்கப்படும் அட்டைகளோடு அடிப் படைத் தேவைகளையே புறக்கணிக்கும். இந்தியா போன்ற நாடுகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது.. இது போன்ற ‘பயோ மெட்ரிக்’ அடையாளத் திரட்டல் இங்கிலாந்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.  மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடு வோரை அடக்குமுறைச் சட்டங்களில் கைது செய்து சிவில் உரிமைகளை உறுதி செய்யாத மக்களை சந்தேகிக்கக்கூடிய ஆட்சிகளின் கீழ் இத்தகைய கண்காணிப்பு தொழில் நுட்பங்கள் இருப்பது ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும். தமிழ்நாட்டுக் குடிமகனாக இருப்பவர்களை நேரடியாக இந்திய ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ஆதார், அடையாளம் அல்ல; ஆபத்து என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

Pin It