Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்™ கடந்த ஐந்து ஆண்டுகளில்™ நிலநடுக்கங்களும், பூமியில் இருந்து உருகிய பாறைக்‚குழம்புகள்œவெடித்து மேலெழும்பும் நிகழ்வுகளும்‹ பல முறை நிகழ்ந்துள்ளன. 2001 நவம்பர்˜ 24 ஆம்‹ தேதியன்று தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும்‹ இடையில்™ அமைந்துள்ள சுரண்டையை அடுத்துள்ள நிலம்‹ ஒன்றில் உருகிய பாறைக்குழம்பு வெடித்து மேலெழும்பியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப்Š பின்னர், கூடங்குளத்தில் அமையவிருக்கும்‹ அணுஉலைகள் இந்த நிலவியல்™சூழ்நிலைகளைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலவியல் சூழ்நிலைகளையெல்லாம் தாங்கும்‹ அளவிற்கு இந்த உலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்œ நம் அணுசக்தி விஞ்ஞானிகள்œ.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியைச் சேர்ந்த டாக்டர்˜. மணிமாறன் போன்ற நிலவியலாளர்கள்œ இந்த அணுஉலையின் பூகம்பவியல் பாதுகாப்புத்ˆதிறனை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்‹என்று கருத்துˆ தெரிவித்திருக்கிறார்கள். இப்புத்தகம்‹மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் ‚கொள்கிறது. இவற்றைப்Š புரிந்து கொள்வதற்காக இவை இரண்டுடனும்‹தொடர்புடைய முக்கிய ஆய்வுக்‚கட்டுரைகள் அனைத்தையும்‹ ஆராய்ந்து பார்க்கிறது.

புத்தகத்தினைப் படிக்க இங்கு அழுத்தவும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 mathivanan 2012-10-19 11:49
மதிப்பிற்குரிய நண்பர் இரமேஷின் முயற்சி மகத்தானது. அவரின் முன்வைப்புகளை இதுவரை யாரும் மறுக்கவில்லை என்பது மிகந்த கவனத்துக்கு உரியது.
Report to administrator
0 #2 ஆறுமுகம் 2012-10-29 16:08
சமீபத்தில் களக்காட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது கூடங்குளத்திற்க ்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட நிலவெளி துாரம் சுமார் 40 கி.மீ. (கூகுளில் சரிபாத்த்து கொள்க).

அக்டோபர் 14, 2012

ஆதாரம் - தமிழ் முரசு.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=34778
மாலைமலர்.
http://www.maalaimalar.com/2012/10/14102030/2-times-earthquake-in-Kalakadu.html
Report to administrator

Add comment


Security code
Refresh