ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தினை நெடுவாசல் பகுதியிலும், காரைக்கால் பகுதியிலும் செயல்படுத்த முயல்வதைக் கண்டித்தும், தமிழகம் பாலைவனமாகாமல் தடுக்க ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் என கொடுக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 25-2-2017 சனி மாலை மே பதினேழு இயக்கத்தினரால் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நெடுவாசல் பகுதியிலிருந்து இளைஞர்கள் வந்து போராட்டத்தினை வாழ்த்திச் சென்றனர்.

தொடர்ச்சியான போராட்டங்கள் இது குறித்து நடத்தப்படும் என முன்வைக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகனப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, நெடுவாசல் இளைஞர்கள், மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் பிரவீன், பன்னீர், திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

காணொளிகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Pin It