தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும், பத்திரிகையாளருமான ப.கவிதா குமார் எழுதிய, "உத்தப்புரங்களும், சாதியத்தின் அந்தப்புரங்களும்" என்ற கட்டுரை நூல் வெளியீட்டு விழா மதுரையில் 21.6.2010 அன்று மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

மதுரை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானம் அருகில் உள்ள இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் இராயப்பன் குழுவினரின் இசைநிகழ்வோடு விழா துவங்குகிறது. கவிஞர் ஸ்ரீரசா தலைமை வகிக்கிறார். எம்.ஆர்.கணேசன் வரவேற்புரையாற்றுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நூலை வெளியிட, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.

தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தமுஎகச மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் ந.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நூலாசிரியர் ப.கவிதா குமார் ஏற்புரையாற்றுகிறார். அ.கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

kavitha_book

Pin It