2010 ஏப்ரல் 30 க்குள் கட்டுரை விடுத்திட வேண்டுகோள்

தலைப்புகள்: 

1. தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தன்னுரிமைத் தமிழ்நாடு முதலான துறைகளில் தமிழ்நாட்டுத் தமிழரின் உண்மை நிலை என்ன? வெற்றி வேண்டுமெனில், எத்தகைய செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்? 

2. இந்திய அரசில் தமிழ்நாட்டுத் தமிழரின் உண்மை நிலை என்ன? மாற்றம் ஏற்பட தீர்வுகள் யாவை? 

3. உலக நாடுகளிலுள்ள தமிழர்கள் அவரவர் வாழும் நாடுகளில் பெற்றுள்ள இன்றைய உண்மை நிலை என்ன? இவர்களின் மேம்பாட்டுக்குத் தமிழகத் தமிழர் - தமிழக அரசினர் ஆற்றத் தக்க கடமைகள் யாவை? 

விதிமுறைகள்:

1. கட்டுரை தெளிவான கையெழுத்தில் என்றால், 300 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தட்டச்சு செய்யப்பட்டிருந்தால் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

2. ஒருவர் ஒருதலைப்பைப் பற்றி மட்டுமே கட்டுரை எழுதலாம். கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.  

3. ஒவ்வொரு தலைப்புக்கான கட்டுரைகளிலிருந்தும் 3 கட்டுரைகள் மட்டுமே தேர்வு செய்யப்படும்.  

4. சிந்தனையாளன் ஆசிரியர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கட்டுரை ஒவ்வொன்றுக்கும் முறையே ரூ 3000, ரூ 2000, ரூ 1000 என அன்பளிப்பு வழங்கப்படும்.  

5. 30.4.2010க்குப் பிறகு வரும் கட்டுரை ஏற்கப்படமாட்டாது.  

6. தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் 2010 சூன் இதழ் முதற்கொண்டு "சிந்தனையாளன்" இதழில் வெளியிடப்பெறும். 

 உரையின் மேல் எழுதவேண்டிய முகவரி:

 சிந்தனையாளன் கட்டுரைப் போட்டி

 ஆசிரியர்

"சிந்தனையாளன்"

19 முருகப்பா தெரு (மாடி)

சேப்பாக்கம்,

சென்னை - 600 005 

பேசி: 044 - 2852 2862     

Pin It