மே 11/2014 ஞாயிறு மாலை 5 மணி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக மாடி (சூரம்பட்டி நால்ரோடு அருகில்)

தலைமை: தோழர் கி.வே.பொன்னையன் (தமிழினப் பாதுகாப்பு இயக்கம்)
வரவேற்புரை : தோழர் மங்கையர்க்கரசி (தற்சார்பு விவசாயிகள் சங்கம்)
எழுச்சிப் பாடல்கள் : தோழர் சமர்பா குமரன்

ஆவணப்படத்தை வெளியிட்டுக் கருத்துரை:

திரு அ.கணேசமூர்த்தி அவர்கள் (ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்)
தோழர் கொளத்தூர் மணி அவர்கள் (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்)
தோழர் கா.சு.நாகராஜ் அவர்கள் (மேற்கு மண்டல அமைப்பாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

மகா.தமிழ்ப்பிரபாகரனுக்குச் சிறப்பு செய்தல் மற்றும் கருத்துரை

தோழர். கண.குறிஞ்சி அவர்கள், (தமிழகத் துணைத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் - பி.யூ.சி.எல்)

ஆவணப்படத்தை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை

தோழர் வழக்குரைஞர் செயராசு - (நாம் தமிழர் இயக்கம்)
தோழர் தமிழ்ச்செல்வன் - (தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்)
தோழர் கலைவேந்தன் - (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்)
தோழர் வீரமுருகன் - (ஆதித்தமிழர் பேரவை)
தோழர் சுப்பு.இரவிக்குமார் - (பவானி ஆற்றுநீர்ப் பாதுகாப்பு இயக்கம்)
தோழர் மறைமலையன் - (புரட்சிகர இளைஞர் முன்னணி)
தோழர் இளங்கோவன் - (தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி)
தோழர் இமயவரம்பன் - (ஆதித்தமிழர் மக்கள் கட்சி)

நன்றியுரை : தோழர் சரவணன் (தமிழகத்தொழிலாளர் முன்னணி)

ஏற்புரை : தோழர் மகா.தமிழ்ப்பிரபாகரன் (ஊடகவியலாளர்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு 9788648605, 9443307681.

***

"இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது'' ஆவணப்படம் - ஓர் அறிமுகம்

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அளவற்ற கொடுமைகளைக் கண்டறிவதற்காக நேரடியாகத் தமிழீழத்திற்குச் சென்று வந்தவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். முப்பத்து நான்கு நாள்கள் தமிழீழத்தில் அவர் பல்வேறு இடங்களில் பயணம் செய்து, பல்வேறு மக்களைச் சந்தித்து இன்று அங்கு நிலவரம் எவ்வாறு உள்ளது எனக் காட்சி வடிவில் படமெடுத்து, இலங்கை இராணுவத்தின் கெடுபிடியிலிருந்து தப்பி வந்துள்ளார். இலண்டனிலும், ஜெனிவாவிலும் இந்த ஆவணப் படத்தின் ஆங்கில மூலப்படியை வெளியிட்டு இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலையைச் சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களின் தாயக மண் இன்று எவ்வாறு சிங்களக் காடையர்களின் இராணுவக் கட்டுபாட்டில் சீரழிந்து வருகிறது என்பதைச் சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப் படம் நமக்குத் தெளிவாக்குகிறது.

தமிழீழப்பகுதியில் திட்டமிட்டு நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலையும், நில அபகரிப்பையும், தமிழின அழிப்பையும் தகுந்த சாட்சி ஆதாரங்களுடன் விளக்குகிறது இப்படம். 2009 போரில் சிங்கள இராணுவம் இரசாயன ஆயுதங்களையும், ஒரு கிலோ மீட்டருக்கு மேல் தாக்கியழிக்கும் அதியுயர் குண்டுகளையும் பயன்படுத்தியதைச் சிங்கள இராணுவ சிப்பாயே கூறுவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். இந் நிகழ்கால ஆதாரக் காட்சிகள் யாவும் உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

2012 நவம்பர் மற்றும் 2013 திசம்பர் ஆகிய காலகட்டத்தில் இலங்கை சென்றிருந்த பொழுது படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படம், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழகத்திலேயே முதன்முதலாக ஈரோட்டில் மே 11 / 2014 ஞாயிறன்று திரையிடப்படுகிறது. இப்படத்தை எடுத்துள்ள மகா.தமிழ்ப் பிரபாகரன் தமிழீழப்பயணம் குறித்து ஜுனியர் விகடனில் எழுதி வந்த "புலித்தடம் தேடி'' எனும் தொடர், வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது அனைவரும் அறிந்ததே! அந்த இளைய ஊடகவியலாளரின் மற்றொரு அரிய படைப்புத்தான் தரவுகள் நிறைந்த இந்த ஆவணப்படம்.

Pin It