இது எளிய மக்களின் போராட்ட வரலாறு. சமூக மாற்றத்துக்கானப் போராட்டங்கள் அனைத்தும் எளிய மக்களாலே நடத்தப்படுகின்றன. அளவற்றப் படிப்பினைகளை நிரப்பிக் கொண்டிருக்கிற இம்மக்களின் போராட்டங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதேயில்லை.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்திலும், அதை சுற்றியுள்ளப் பகுதிகளிலும் விசைத்தறித் தொழிலாளர்களாகிய எளிய மக்களே நக்சல்பாரிகளாக; நக்சல்பாரிகளே தொழிலாளர்களாக வாழ்ந்த உண்மையை ஆவணமாக்கியிருக்கிறது இந்த நாவல்.

தமிழ்நாட்டின் மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் மக்கள் இயக்க நடவடிக்கைகளை முறையான இலக்கியமாக அளிப்பதில் அநேகமாக இதுவே முதல் முயற்சியாக இருக்கக் கூடும்.

இந்த வெளியீடு நிகழ்வு ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட விழா அல்ல. நம் ஒட்டுமொத்த இயக்கங்களின் அபிலாசையாகும். தவிர்க்காமல் அனைவரும் வருக.

4/01/2014 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு
இஷா ஹால் / கன்னிமாரா லைப்ரரி எதிரில் / சென்னை

நிகழ்ச்சி நிரல்

தலைமை: தோழர்-.இரா.முருகவேள்

வெளியிடுபவர்: தோழர் - கோவை ஈஸ்வரன்

பெற்றுக்கொள்பவர்: தோழர்-பெரியசாமி,சேலம்

நூல் ஆசிரியரை சிறப்பித்தல்: தோழர்-சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

கருத்துரை

தோழர்-செல்வி
தோழர்-தமிழ்வாணன்
தோழர்-யாழினி முனுசாமி எழுத்தாளர்
தோழர்-ஏலகிரி இராமன்
தோழர்-சித்தானந்தம்
தோழர்-பாலன்
தோழர்-கி.நடராசன் எழுத்தாளர்
தோழர்-விந்தைவேந்தன்
தோழர்-வா.சு.சதிசுசங்கர்

ஏற்புரை: தோழர்-பாரதிநாதன்

நன்றியுரை: தோழர்-திருப்பூர் குணா

தறியுடன்...
இரா.பாரதிநாதன்         
பொன்னுலகம் பதிப்பகம்
பக்கங்கள்: 800 விலை: 650 ரூபாய்
4/413 பாரதிநகர் 3வது வீதி பிச்சம்பாளையம் (அஞ்சல்) திருப்பூர் 641603
9486641586

Pin It