ஈழத்தில் 2009ல் உலகம் தடை செய்த ஆயுதங்களைப் போட்டு ஈழத்தமிழர்கள் 1, 46, 679 பேரை இனப்படுகொலை செய்ய சிங்கள இனவாத அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்த இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் இப்பொழுது அதை மறைக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை மறுக்கவும் புதுப்புது வழிகளை கையாண்டு வருகிறது. இனப்படுகொலைக்கு பின்பும் தமிழீழ விடுதலை என்கிற கோரிக்கை தமிழர்களிடத்தில் இருந்து நீங்காத காரணத்தினால் அதனை திசைதிருப்பவும், மழுங்கடிக்கவும் பல்வேறுசெயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அதில் முதல்படியாக அமெரிக்காவின் ஊடாக கொண்டு வரப்பட்ட தீர்மானமும், அந்த தீர்மானத்தின் உள்ளடக்கத்தினை மையப்படுத்தி நகர்த்தப்படுகிற மாகாணத் தேர்தலும் நம்மால் உடனடியாக எதிர்கொள்ளப்படுதல் அவசியம். இதனை சாத்தியப்படுத்தினால் இலங்கைக்கு காமன்வெல்த் நாடுகளின் மாநாடு என்கிற வெற்றிக்கோப்பையை பரிசளிப்போம் என்பதான செயல்களும் பின்னால் நகர்த்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த மக்கள் திரள் போராட்டங்கள் மிக மிக அவசியமாகிறது. இதன்படியே அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து பல மக்கள் திரள் போராட்டங்களை கடந்த காலத்தில் நிகழ்த்தினோம்.

அமெரிக்கா 2012 மற்றும் 2013ல் ஐநா மனிதஉரிமை ஆணையத்தில் கொண்டு வந்த இலங்கையே தனது நாட்டில் ஒரு குழு அமைத்து இனப்படுகொலையை விசாரிக்க வேண்டும் (குற்றவாளியே நீதிபதியாக்கம் முயற்சி) என்ற வந்த அயோக்கிய தீர்மானம். இந்த அயோக்கிய தீர்மானத்தை 2012ல் அமெரிக்கா கொண்டுவந்த போதே நாம் அதை எதிர்த்து மார்ச் 18, 2012ல் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலை நடத்தி ”தமீழீழமே ஒரே தீர்வு” என்று முன் வைத்தோம் (http://may17movementnews.blogspot.in/2012/04/18-2012.html). அதேபோலவே 2013 மார்ச்17லும் ”தமீழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பை நடத்து” என்றும் ”அமெரிக்காவின் ஐ.நா தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது” என்றும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலை சென்னை மெரினாவில் நீதி கேட்ட கண்ணகி சிலையின் பின்புறம் நடத்தினோம் (http://may17movementnews.blogspot.in/2013/04/blog-post_4302.html). இதன்படி அமெரிக்கா கொண்டுவந்த அந்த அயோக்கிய தீர்மானமானது, தமிழீழ ஆதரவு இயக்கங்கள்-கட்சிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து தமிழர்களின் முயற்சியாலும் முறியடிக்கப்பட்டது.

அதன்பிறகு, இரண்டாம் கட்டமாக இப்பொழுது அமெரிக்காவை போலவே ஒரு அயோக்கியத்தனத்தை இந்த முறை இந்தியா தனது துருப்பிடித்துப்போன 1987ல் ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்ற வகையில் கொண்டுவந்து இலங்கையில் தமிழர்கள் அனைவரும் சிங்கள இனவாத அரசின்கீழ் வாழத்தான் விரும்புகிறார்கள் என்று உலகை நம்ப வைக்கும் முயற்சியை அமெரிக்கா மற்றும் இலங்கையின் கூட்டோடு செய்ய முயலுகிறது.அதன் ஒரு பகுதிதான் இந்த 13வது சட்ட திருத்தமென்பதும், வடக்கு மாகான தேர்தல் என்பதும் அதன் மூலம் கிடைக்கும் நற்பெயரை வைத்து இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாடுமென்பதாகும்.இதனடுவே இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதல் தொடர்ந்து நிகழ்வதை கவனத்தில் கொண்டுவர இக்கோரிக்கையில் இசுலாமிய மக்கள் மீதான தாக்குதலையும் சர்வதேசம் கணக்கில் எடுக்கவேண்டுமென்கிற கண்டன முழக்கமும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மே17 இயக்கம் கீழ்வரும் கோரிக்கைகளுடன் ஆகஸ்ட் 17, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி மற்றும் இயக்க தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்துகிறோம். (குறிப்பு: ஆகஸ்ட்18 ஆம் தேதி திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வு, ஈரோட்டில் நடக்கும் சாதிய எதிர்ப்பு மாநாட்டிற்காக கடைசி நிமிடத்தில் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பதை தொடர்புகொள்ள முடியாத பலதோழர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். )

கோரிக்கைகள்:

1.1987-லேயே ஈழத்தமிழர்கள் கிழித்தெறிந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13வது சட்டதிருத்தத்தை புறக்கணிப்போம்.

2.இலங்கையில் நடக்கவிருக்கும் வடக்கு மாகாண தேர்தலை ஈழத்தமிழர்களை புறக்கணிக்கக் கோருவோம்.

3.காமன்வெல்த் மாநாட்டை இனப்படுகொலை மண்ணான இலங்கையில் நடத்தாதே.

4.சிங்கள பெளத்த -இனவெறியோடு இலங்கையில் உள்ள மசுதிகளை இடிக்காதே.

அனைவரும் தமிழர்களாய் திரள்வோம். வாருங்கள்

- மே 17 இயக்கம்.
9600781111-9443486285

Pin It