இடம் : காதி க்ராஃப்ட். திருச்சி
நாள்: 17.10.12 புதன்கிழமை மாலை 4.00 மணி

நாமக்கல் விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மாணவி வெ.காயத்ரியின் கொலை வழக்கினை சிபிஐ க்கு மாற்று!

நாமக்கல் விவேகானந்தா கல்விக் குழுமங்களின் தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்ரீநிதி ஆகியோரை தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்!

2010 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜோதி, தைரியலட்சுமி, மணிவண்ணன் ஆகிய ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.

மேற்கண்ட தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பு போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை                     அதிகாரிகளையும் அப்போதைய துணைவேந்தர் மன்னர் ஜவஹரையும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்!

நாமக்கல் காயத்திரி கொலை குறித்து விசாரணை நடத்தக்கோரி கடந்த 24.10.12 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தோழர் அதியமான், பொதுச் செயலாளர் நீலவேந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நாமக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்!

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவி களிடம் பாலியல் வன்கொடுமைகளை நடத்தும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடு!

கல்லூரிகள் - பல்கலைக்கழகங்களில்  இண்டர்னல் மார்க் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்யும் பேராசிரியர்கள் உடனடியாக நடவடிக்கை எடு!

தலைமை
தோழர் மீ.இ.ஆரோக்கியசாமி
மாவட்டத் தலைவர்

முன்னிலை
தோழர் வே.க.குமார்
தோழர் நா.குணராஜ்

கண்டன உரை
தோழர் புதியவன்
மண்டல அமைப்புச்செயலாளர்

- திராவிடர் விடுதலைக் கழகம், திருச்சி மாவட்டம்
9842806098, 9942770199, 9443508901

Pin It