இன்று 13-09-2012 பிற்பகல் 2 மணிக்கு மதுரையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில் பங்கெடுக்கும் அமைப்புகளின் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. ஆபத்தான கூடங்குளம் அணு உலைக்கு எதிராக  அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் அதற்கு எதிராக தமிழக அரசின் காவல் துறையால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும் உடனடி போராட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், ’தென் தமிழகத்தை அணு ஆபத்திலிருந்து பாதுகாத்திட நடக்கும் போராட்டம்; ஒட்டு மொத்த தமிழக மக்களின் ஜனநாயகக் கோரிக்கை’ என்பதை மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உணர்த்தும் விதமாக வரும் 16-09-2012 தேதி  ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதாக் கோயில் திடலில் அணி திரண்டு, அங்கிருந்து  இடிந்தகரை நோக்கி கடற்கரை சாலையில் பேரணியாய் புறப்பட இருக்கின்றோம். இதில் தமிழகத்தில் உள்ள அணு உலையை எதிர்க்கும் அனைத்து கட்சி, இயக்கங்களைச்  சேர்ந்த முன்னணித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.தமிழகமெங்கும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்கள், ஜனநாயக ஆற்றல்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றபுறச் சூழல் ஆர்வலர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கின்றோம். 

மத்திய மாநில அரசுகளே,

கூடங்குளம் பகுதியிலிருந்து காவல் படைகளை உடனடியாக வெளியேற்று!
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் அந்தோணி ஜான்-ஐ சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரிகளை கைது செய்!
போராட்டத்தில் கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்!
போராடும் மக்களோடு பேச்சுவார்த்தை நடத்து!
கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! 


தோழமையுடன்

கொளத்தூர் மணி,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு: 9443184051


உறுப்பு அமைப்புகள்:
திராவிடர் விடுதலைக் கழகம்                
இந்திய கம்யூனிஸ்ட கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை
அகில இந்திய மீனவர் சங்கம்                 
மனித நேய மக்கள் கட்சி
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா                                                  
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி    
தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்                
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
பெண்கள் முன்னணி                               
சேவ் தமிழ்சு இயக்கம்
சோசலிஷ்ட் யூனிட்டி செண்டர் ஆஃப் இந்தியா( கம்யூனிஸ்ட்)
தமிழக மக்கள் விடுதலை முன்னணி   
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
மே 17 இயக்கம்
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கம்
மக்கள் ஜனநாயக கட்சி
மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL)
உள்ளிட்ட 60 அமைப்புகள்

Pin It