திரையிடப்படும் படம்: அக்ரஹாரத்தில் கழுதை (இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)

சிறப்பு அழைப்பாளர்: ஆர்.ஆர். சீனிவாசன்

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
நாள்: 21-07-2012, சனிக்கிழமை 
நேரம்: மாலை ஐந்து மணிக்கு (5 PM)

நண்பர்களே 

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இனைந்து நடத்தும் "மாற்றம் தந்த இந்திய சினிமா" திரையிடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21-07-2012) தொடங்கவிருக்கிறது. 

இதுவரை உலகப் படங்களை மட்டுமே பார்த்து அவற்றை சிலாகித்து நமது சுயம் மறந்து போன இந்த நேரத்தில் நமது இந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் சில உலகத்தரத்தில் வெளிவந்துள்ளன என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியான மேன்மை மிகு இந்திய சினிமாக்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதுவரை இந்திய மொழிகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, இன்னும் பல மொழிகளில்) வெளிவந்த மிக சிறந்த படங்கள் இந்த திரையிடலில் திரையிடப்படவிருக்கிறது. 

இந்த திரையிடல் நிகழ்வின் முக்கிய அம்சம் திரைப்பட திறனாய்வு / கலந்தாய்வு. திரைப்படம் முடிந்ததும், திரையிடலுக்கு அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர் அந்த திரைப்படம் குறித்து தன்னுடைய கருத்துகளை முன்வைப்பார். பின்னர் பார்வையாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெறும். 

அனுமதி இலவசம். அனைவரும் அவசியம் வாருங்கள். இந்திய சினிமாவின் மேன்மையை உணருங்கள்...

ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ & பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை.

Pin It