காண்டி, நாகபுரியில் தொழிலாளர்களைத் திரட்டி, தொழிற்சங்கங்களைக் கட்டியமைத்து போராட்டங்களை நடத்துவதிலும், வீட்டுவேலை செய்யும் பெண்களை அமைப்பாக்குவதிலும் பெரும் பங்காற்றினார். தலித் மக்கள் பெரும்பான்மையினராகக் கொண்ட சேரிப் பகுதியில் குடியேறி அவர்களோடு ஒன்றிணைந்து சாதி ஒழிப்புக்காகப் போர்க்கொடி உயர்த்தினார்.

பின்னர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு தண்டகாரண்யாவில் பழங்குடி மக்களின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று மரணத்தைத் தழுவும் வரை கடுமையாகச் செயலாற்றினார். உயிர்க்கொல்லி விஷ மலேரியாவால் தாக்குண்ட புரட்சியாளரான தோழர் அனுவை 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் நாளன்று மரணம் கவ்விக்கொண்டது. புரட்சிகர அறிவாளிகளுக்கும், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் எத்தகைய இயங்கியல் ரீதியான உறவு இருக்க வேண்டும் என மார்க்சியம் போதித்ததோ, அதற்கான அற்புதமான எடுத்துக்காட்டாக ஒளி வீசியவர் தோழர் அனு.

சமகாலத்திய அனைத்துப் பிரச்சனைகளையும் மார்க்கிய லெனினிய மாவோவிய வழியில் ஆய்வுசெய்து தனது நிலைபாடுகளை எடுத்துரைத்த அவரது கட்டுரைகளின் தொகுப்பான, “மாற்றத்திற்கான எழுத்துக்கள்” என்ற இந்நூலை அவரின் நினைவாக வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சாதிப் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை மற்றும் சம காலத்தில் எதிரிட்ட பிற பிரச்சனைகள் ஆகியவை குறித்து ஆழமாக ஆய்வு செய்து தோழர் அனுராதா காண்டியால் எழுதிய கட்டுரைகளின் சிறப்பான தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.

“நீங்கள் யார் பக்கம்? போராடும் மக்கள் மக்கமா? அதிகார வர்க்கத்தின் பக்கமா?” என்று பிரபல எழுத்தளார் ரெஜி டிப்ரே முன்வைத்த மேற்கோளை படித்த வர்க்கத்தினர் அனைவரும் நினைவு கூற வேண்டும்.

anuradha_gandi_363

தலைமை
எஸ்.வி.ராஜதுரை

வரவேற்புரை
பேரா. கோச்சடை

சிறப்புரை
ஆனந்த் டெல்டும்புடே
வழக்கறிஞர் சூசன்
கோவை ஈசுவரன்
வழக்கறிஞர் பானுமதி
வழக்கறிஞர் அகராதி

நன்றியுரை
பேராசிரியர் சிவக்குமார்

இடம்
“புக் பாயிண்ட்” வளாகம்
ஸ்பென்சர் பிளாசா எதிரில்
120, அண்ணா சாலை, சென்னை & 2
நாள்: 1.4.2012 ஞாயிற்றுகிழமை
நேரம்: மாலை 5.30 மணி

***

அனுராதா காண்டி நினைவுக்குழு
தமிழ்நாடு
9444323306 - 9443534252
9444166787 - 9443883117

Pin It