அன்பார்ந்த தமிழக மக்களே!

ஈழத்தமிழர்கள் மீது இனஅழிப்புப் போரை நடத்திய போர்குற்றவாளி ராஜபக்சே கொலைகார கும்பலை தண்டிக்க கோரி உலகம் முழுவதும் பெரும் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. நாசமாக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை மீட்டெடுக்கவும் மாய்க்கப்பட்ட மனித உரிமைகளை காப்பாற்றவும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இன்று உலகம் முழுவதும் மரண தண்டனை சட்டத்தை நீக்கி மனித நேயத்தை உயர்த்திப் பிடிக்க போராடி வருகின்றனர்.

இந்நிலையில்தான் இந்திய அரசு சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் பஞ்சாபின் தேவேந்தர் பால்சிங் புல்லர், காஷ்மீரின் அப்சல் குரு, அசாமின் மகேந்திரநாத் என ஆறுபேரின் கருணை மனுவை குடியரசு தலைவர் மூலம் நிராகரித்துள்ளது. 40 பேரின் கருணை விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.

உலகில் 75 நாடுகள் மரண தண்டனையை நீக்கிவிட்டன. 8 நாடுகள் போர்க்குற்றத்திற்கு மட்டுமே என வைத்துள்ளன. 34 நாடுகளில் மரண தண்டனை சட்டம் இருந்தாலும் பயன்படுத்தாமல் உள்ளன. பெரிய்ய.... சனநாயக நாடான அமெரிக்கா, இந்தியா, சீனா... உள்ளிட்ட 41 நாடுகள் மட்டுமே மரண தண்டனையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இன்று மரண தண்டனையின் முன் 389 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சாதாரண மக்கள், சனநாயகவாதிகள், மனித உரிமையாளர்கள், புரட்சியாளர்கள், மாவோயிஸ்ட்கள் என்பவர்களே மரண தண்டனைமுன் உள்ளனர். வடகிழக்கு தேசிய இனங்களின் விடுதலையை ஒடுக்கி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்ற எந்த அரசியல் தலைவரோ, ராணுவத் தளபதியோ, போலி என்கவுண்டர் செய்த போலிசோ இல்லை. அப்படியென்றால் அரசாங்கம் அப்பாவி மக்களை கொன்றது கொலை இல்லையா? மக்களை சுரண்டி, மனித உரிமைகளை மாய்த்து, நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்து கொள்ளையடிக்கும் ஆளும்வர்க்கம், கூட்டணி அமைத்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவே மரண தண்டனையை மக்கள் மீது திணிக்கின்றன. அமெரிக்காவில் கருப்பர்களுக்கும் ஏழைகளுக்கும்தான் பெரும்பாலும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. என்கிறார் அந்நாட்டு நீதிபதி.

ராஜபக்சே கும்பல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்தது என்று அய்.நா. சபை அறிவித்த பின்பு உலகம் முழுவதும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை தண்டிக்க வேண்டுமென போராட்டம் வெடிக்கின்றது. இந்தியாவோடு கூட்டணி அமைத்து தான் ராஜபக்சே கும்பல் போர்க்குற்றம் புரிந்தது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. தமிழரின் துயரத்தில்  எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் மூவரின் மரண தண்டனையை நிறைவேற்றத் துடிக்கின்றது இந்திய அரசு. இலங்கையுடனான அரசியல் லாபத்திற்காக மூன்று தமிழர்களின் உயிரை மாய்க்க துடிக்கின்றது. ஆனால் பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று மரண தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித்சிங்கை காப்பாற்ற மனித உரிமை பற்றியும், நல்லுறவு பற்றியும் நரித்தனமாக பேசுகின்றது. இதே மனித உரிமைகளை இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்திப் பார்க்க இந்திய அரசு விரும்புவதில்லை! மேலும் அய்.நா. சபையிலும், உலகளவிலும் நடக்கும் மனித உரிமைகள், அகதிகள் மறுவாழ்வு போன்ற அனைத்திற்கும் எதிராகவே இந்தியா செயல்படுகின்றது.

பழங்குடி மக்களையும், பச்சைக் காடுகளையும் அழித்து கனிவளங்களை சூறையாட பசுமைவேட்டை நடத்துகிறது மன்மோகன் & சிதம்பரம் கும்பல். இவர்கள் காஷ்மீரின் அப்சல் குரு, பஞ்சாபின் தேவிந்தர் பால்சிங் புல்லர், அசாமின் மகேந்திர நாத், தமிழ்நாட்டின் மூன்று தமிழர்கள் ஆகிய 6 பேரின் உயிரைக் குடிக்க துடிக்கின்றனர். ஆக இவர்கள் அனைவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

இந்திய அரசே!

மரண தண்டனை சட்டப் பிரிவை உடனே ரத்துசெய்!

தற்போதுள்ள மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்று 

தமிழக அரசே!

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்.

தமிழகத்திலுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் ஆயுள் தண்டனையாக மாற்று.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று சட்டசமையில் தீர்மானம் நிறைவேற்று.

இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

நாடு முழுவதும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி போராடுவோம்.

தேவீந்தர் பால்சிங் புல்லர், அப்சல் குரு, மகேந்தர்நாத் ஆகியோரின் மரண தண்டனையை நீக்க கோரி போராடுவோம். 

மரண தண்டனையை ஒழிப்போம்! மனித நேயம் காப்போம்!

“சாதி, மத, இன, வர்க்க, அரசியல் முரண்பாடு கடந்து மனித உயிர் காக்க மக்கள் அனைவரும் ஒன்றினைவோம்!” 

 ***

இருசக்கர வாகனப் பேரணி

(கோயில் நகரத்திலிருந்து கோட்டை நகரம் வரை)

30.08.2011 - செவ்வாய்

தொடக்கம்: காலை 10 மணி - பெரியார் சிலை, திருவண்ணாமலை

நிறைவு: மாலை 5 மணி - வேலூர் கோட்டை

முன்னிலை:    தோழர். பெருமாள், தமிழர் கழகம், தா.மா. பிரகாஷ், மக்கள் உரிமை கட்சி

க. பிச்சைமணி, பா.ம.க. வழக்கறிஞர் அணி

வரவேற்புரை:  தோழர். சேகர், வழக்கறிஞர்

தலைமை:     தோழர். விநாயகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

பேரணி தொடங்கி வைத்தல்:  தோழர். மா.கு. பாஸ்கர், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை

பேரணி ஒருங்கிணைப்பு:

திருவண்ணாமலை:    திரு. ராம.பச்சையப்பன், வழக்கறிஞர் ம.தி.மு.க., திரு. சிவக்குமரன், நாம் தமிழர் கட்சி,

திரு. எம்.ஜி. கதிர், மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில்.

கலசபாக்கம்:  தோழர். பீம்அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தோழர். செங்கம் பாலாஜி, நாம் தமிழர் கட்சி.

போலூர்:     தோழர். நேதாஜி, வழக்கறிஞர், ம.தி.மு.க., தோழர். கந்தன், பெரியார் தி.க.,

 தோழர். ஆறுமுகதாசன், நாம் தமிழர் கட்சி.

 களம்பூர்:     தோழர். கந்தசாமி, தோழர். ஏழுமலை, இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை.

 ஆரணி:      வி.எஸ்.வெங்கடேசன், பா.ம.க., தோழர். திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி,

        தோழர். விழியரசு, திரு. ரத்தின குமார், ம.தி.மு.க.

 கண்ணமங்களம்:     க.பி.பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏ.சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி,

     எச்.ஹசேன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

 வேலூர்:      தோழர். தா.குப்பன், மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கம், தோழர். தேவி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்,

         தோழர். ராஜேந்திரபிரசாத், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்.

பேரணி முடித்து வைத்தல்:    தோழர். முருகன், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.

நன்றியுரை:    தோழர். சந்திரசேகர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.

 ***

குடியுரிமை பாதுகாப்பு நடுவம் - CPCL.

வேலூர் - திருவண்ணாமலை

சந்திரசேகர் - 99944 95712, விநாயகம் - 94424 14887

99433 11889, 99432 16762, 94431 15259, 94434 39869 

Pin It