சமீபத்தில் ஒரு அன்பர் சாதி வெறி சம்பந்தமான ஒரு கட்டுரையை ஒட்டி எனது தளத்தில் நடந்த கடுமையான விவாதத்தில் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

“இந்துமத தத்துவங்களுக்கு எதிராக தற்போது நடந்து வரும் அடக்குமுறையின் வெளிப்பாடாய் காலப்போக்கில் கிளர்ந்து எழ இருக்கும் இந்தியர்களின் இயக்கத்தையும் இதே கண் கொண்டு தங்களால் பார்க்க இயலுமா?”

ஒரு பிற்போக்கு, பெருவாரியான மக்களை மனிதர்களாகக் கூட அங்கீகரிக்காத ஒரு தத்துவத்தை ஆதரிக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டாரே என்று, அவரை போன்ற மற்றவர்களுக்கும் சேர்த்து பின்வரும் கதை ஒன்றைச் எழுதினேன்:

*******************

ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டுல மொசக்குட்டிக நிறைய இருந்தது. அள்ள அள்ளக் குறையாத அளவு ரொம்ப அதிகப்படியா இருந்திச்சிங்க. இந்த மொசகுட்டிக கடுமையான உழைப்பாளிக. அந்த காட்டுல கழுதைப் புலி குடும்பம் ஒன்னு வேற இருந்துச்சு. சரியான மொள்ளமாறி குடும்பம், இந்த கழுதப் புலி குடும்பம். இந்த கழுதப் புலி குடும்பம் ரொம்ப வருசமா(ஒரு சில ஆயிரம் வருசம்) அந்த காட்டுலதான் இருக்குதுங்க.

அதோட முப்பாட்டனார் கழுதைப் புலி, கடவுள் சக்தி தனக்கு இருக்குதுன்னு சொல்லி, எங்க வம்சத்துக்கு தினப்படி ஒரு மொசலு(rabit) தானா வந்து பலி கொடுத்துக்கனும்ன்னு சொல்லி காட்டுல இருக்கிற மத்த இனா.வானா. மிருகங்களை நம்ப வைச்சதுங்க. எதித்து பேசின மிருகங்களை கூர்மையான கம்ப நட்டி ஆசன வாயை அதுல உட்காரவைச்ச கோடூரமா கொன்னு போட்டுடிச்சிங்க.

இப்படி அநியாயம் பன்றதையே 'சோமாயனம்', 'சோகவத்பீடை' அப்படின்னு பல புத்தகங்களா எழுதி தேய்வீகமாக்கி வச்சிருந்தாங்க. இது போக நாலு 'வாதம்' எல்லாம் கடவுள் கொடுத்ததுன்னு சொல்லி ஊர அடிச்சி ஏமாத்திக்கிட்டிருந்தாங்க.

உழைப்பாளிகதான அத்தனை கலையையும் உருவாக்குறவிய்ங்ககறத உலக உண்மை. அதே போல மொசக்குட்டிக வேலை செய்யற அலுப்பு தெரியாம இருக்க உருவாக்குன கலைய எல்லாம் இந்த கழுதப் புலி குடும்பம் டாக்குமென்டு பன்னிட்டு. அதையும் கடவுள்தான் கொடுத்தார்ன்னு டன் கணக்குல பூ சுத்துனாங்க. இந்த கஸ்மாலம் பிடிச்ச கழுதைப் புலி கோஸ்டிக ரொம்பவே அதிகப்படியா அழிச்சாட்டியம் பன்னிக்கிட்டிருந்தாங்க. இப்படி மொசக்குட்டிக கிட்டயிருந்தே எல்லாத்தையும் பிடுங்கிட்டு அவுங்களையே அவாமனப்படுத்தியும் வைச்சிருந்தாங்க.

காட்டு பொது ஆத்துல வாய வைச்சி தண்ணி குடிக்கப்படாது. காட்டுக்குள்ள புல்லு காயப் போடப்படாது. இப்படி பல கட்டுப்பாடுக, ஏகப்பட்ட 'ப்படாது'க.

இந்த அநியாயம் ரொம்ப காலத்துக்கு தாங்கலை. மொசக்குட்டிக கூட்டத்திலேயே இந்த அநியாயத்தை எதிர்க்க ஆளுக அதிகமாயிட்டாங்க. இது பத்தாதுன்னுட்டு ஒரு வலிமையான மொசக்குட்டியும், மான்குட்டியும் ரொம்பத் தீவிரமா கழுதைப்புலிகள எதுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இதே நேரத்தில கழுதைப் புலிகளுக்கு போட்டியா சில குள்ள நரிகளும் அந்த காட்டுக்கு புதுசா குடிவந்தாங்க. ஒரு பக்கம் குள்ள நரி கூட்டம் கழுதை புலி சொல்றது டூபாக்கூரு, நாங்கதான் ஒரிசினல் கடவுள் சக்தி உள்ளவய்ங்க அப்படின்னு சொல்லி மொசக்குட்டி கூட்டத்துல ஒரு பகுதியை பிச்சுக்கிட்டு போயிருச்சி. இன்னோரு பக்கம் இந்த மொசக்குட்டிகள்ள பெரும்பாலனவங்க எல்லாம் சேர்ந்து - தலைவர்கள் மொசக்குட்டி, மான்குட்டி தலைமையிலே அங்கங்க கடுமையா போராட ஆரம்பிச்சாங்க.

இதுல இந்த குள்ள நரி கோஸ்டிக ஒரு மாசத்துக்கு ஒரு மொசல பலி கொடுத்தா போதும்ன்னு சொல்லியிருந்தாங்க. அதுவுமில்லாம அவிங்க ஓரளவுக்கு மொசக்குட்டிகள மருவதையா நடத்துனாங்க.

இந்த சூழலல்ல ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாம சரி நாமலும் மொசக்குட்டிகள நம்ம பக்கத்துல வைச்சிக்கலைனா முதலுக்கே மோசமாயிரும்னு இந்த கழுதப் புலிக முடிவு செய்தாங்க.

அதுப்படி தங்களோட அடக்குமுறய கொஞ்சம் குறைச்சி கிட்டு. கொஞ்சம் சமரசம் பன்னிக்கிட்டு. இந்த வாதம், சோமாயணம், சோகவத்பீடை இதெல்லாம் ரோம்ப பெருமை வாய்ந்தது. இந்த காட்டுடோ அடையாளமே இந்த புராண, புரட்டு இழிச்சவாயகாசங்கள்ள தான் இருக்குதுன்னு, Tree TV ல்ல ஞாயித்து கிழமைகள்ள சீரியல் போட்டு மொசக்குட்டிகள விசுவலா(Visual) ஏமாத்த முடிவு செஞ்சாங்க. அது நல்லவே எஃபெக்ட் கொடுத்தது.

சிங்கம், புலி, கரடி இப்படி எவன் ஆட்சிக்கு வந்தாலும் கழுதைப் புலி தான் எப்போதும் சூத்திரதாரியா இருந்தான். அந்த அதிகாரத்த உபயோகிச்சு குள்ள நரிகள கன்ட்ரோல் செய்றதுக்காக சதைமாற்றத் தடைச் சட்டம் எல்லாம் கொண்டு வந்தாங்க. ஆனா இந்த தலைவர் மொசக்குட்டி, மான்குட்டிகளோட வாரிசுகளொட(காட்டு நீதிக்காக போராடுறவங்க) தாக்குதல கழுதப்புலிகளால கன்ட்ரோல் செய்யமுடியல. எங்க போனாலும் அவிங்க ஆள் ஒருத்தன் கரடிகனக்கா உக்காந்திகிட்டு கழுதை புலிகளோட பூசையில மண்ணள்ளி போட்டாய்ங்க.

கழுதைப் புலிகளோட நலன மறைமுகமா சொல்லுறதுக்கு பல பேருல(Name) கச்சி ஆரம்பிச்சாங்க. சோ.எஸ்.எஸ், பீ.எச்சி.ஈ..... இப்படி.

ஒரு பக்கம் மொசக்குட்டி கூட்டத்துல போயி நீயு நானும் ஒன்னு அப்படின்னு புதுசா ஒரு கதைய விட்ட இந்த கழுதைப் புலி கோஸ்டிகள, காட்டு நீதிக்காக போராடுனவங்க அம்பலப்படுத்தி அவமானப்படுத்தினாங்க.

இது பொறுக்க முடியாம யாரோ ஒரு கழுதைப்புலியோ அல்லது புதிய கழுதைப்புலியோ, ப்ரம்மாவோட பிதா அப்படிங்கற பேர்ல வந்து கீழே வர்ர மாதிரி சொல்லிச்சு:

"மொசக்குட்டிக, அடக்குமுறைக்கு எதிரா போராடுரத ஏத்துக்கற காட்டு நீதி போராட்டக்கரர்களே! இதே போல நாளைக்கு கழுதைப்புலிக தங்களோட தத்துவம் அடக்கப்படுதுன்னு சொல்லி அடக்குமுறைக்கு எதிரா போராடினா ஏத்துப்பீங்களான்னு"

இதக் கேள்விப்பட்டவொடனே எனக்கு என்ன கேக்க தோனுச்சுன்னா.....

"நீங்க நல்லவரா... கெட்டவரா??" ன்னு

அவ்வ்வ்வ்வ்வ்வ்................


**********

சொற்குறிப்பு:

சோமாயனம் - இதன் ஹீரோ சோமாறி மொசக்குட்டிகள அழிச்சி கழுதப் புலி ராஜ்யத்த பலப்படுத்தினான்.

சோகவத்பீடை - இத்த சொன்னவர் பேரு கோட்டினன். அவர் ஒரு இழிச்சவாயன் தலையில மொளகா அரச்சி மொசக்குட்டிகளுக்கு எதிரான அடக்குமுறை தத்துவத்தை டாகுமென்ட் செய்தார்.

வாதம் - இது நாலு வகைப்படும். பக்க வாதம், முடக்கு வாதம் இன்னும் ரெண்டு பெர் மறந்து போச்சி தெரிஞ்ச யாராச்சும் சொன்ன சந்தோசமா இருக்கும்.

இதுல பக்க வாதம் மூச்சுடும் அடுத்தவன எப்படி நாசமாக்கிறதுன்னு இருக்கும்.

முடக்கு வாதம் மூச்சுடும் தனக்கு அது வேனும் இது வேனும்னு ஒர கழுதைப் புலி புலம்பல்(கறி சாப்பிட்டிட்டு ஊளையிடுமே அது போல).

புதிய கழுதைப்புலி - கழுதைப் புலி தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் (அ)சிங்கம், கரடி சந்ததியினர். கழுதைப் புலி தத்துவத்தை நடைமுறையில் இந்த கோஸ்டிதான் செயல்படுத்தும். கழுதைப் புலி கோஸ்டி இந்த நூற்றாண்டுல தான் வேற வழியில்லாம நேரடியா நடவடிக்கையில எறங்க வேண்டியதா போச்சி.

Note: சந்து கத தத்துவம், சந்துத்துவம் - இது எல்லாம் கழுதைப் புலி தத்துவத்தோட புத்தகப் பேரு.

****************
டிஸ்கி(Disclaimer):

இந்த கதையில் உள் குத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் வழங்க'ப்படாது'.

-அசுரன்.
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It