ஓர் இனம் அழிக்கப்படும்போது
நாம் செய்ய வேண்டிய
‌சில கடமைகள் உள்ளன
 
ஷெல்லடிகளின் சத்தம்
செவிகளில் விழாமலிருக்க
தொலைக்காட்சிப் பாடலின்
ஒலியளவை அதிகரிக்கலாம்
 
செய்தித்தாள்களில் வரும்
சினிமா பக்கங்களைத் தவிர
எஞ்சியவற்றைக் கிழித்து விடலாம்
 
‌சில அறிக்கைகள் விடலாம்
‌சில கணக்குகளைப் போடலாம்
‌சில எதிரிகளைத் திட்டலாம்
‌சில துரோகிகளை சபிக்கலாம்
 
ஆத்திரப்படலாம்
எரித்துக் கொள்ளலாம்
அடித்துக் கொள்ளலாம்
 
விதியெனலாம்
மதிகெட்டவர்களெனலாம்
 
தப்பி பிழைத்தவர்களின்
கண்ணீரைக் கேட்டுவைக்கலாம்
 
பிறகொரு நாளில்
நிதானமாக
நாலுவரி கவிதையெழுதலாம்
 
- என்.விநாயக முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.