நமது இருக்கையை காவல்
காத்துக்கொண்டிருக்கிறது என் ஒருமை.
எனது வலத்தில் உனது இடத்தில்
வலை பின்னிக்கொண்டிருக்கிறது வெறுமை.
எதற்கென்றே தெரியாமல் ஏளனமாய்
சிரித்துக்கொண்டு போகிறான் ஒருவன்.
காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது நாம்
கடைசியாய் சுவைத்த காலிக் குளிர்பானப் புட்டி.
மிரண்டு போய் திரும்புகிறது
குதித்து வந்த குழந்தை ஒன்று .
நம்மைப் பார்க்க வந்த நீர்க்காகம் என்னை
மட்டும் பார்த்து நீருக்குள் ஒளிகிறது.
வழக்கமான கடலைச் சிறுவன்
வரவே இல்லை கடைசி வரை.
கடைசியாய் மறுதலித்த வார்த்தை ஒன்று
காதுக்குள் கரைந்து கொண்டிருக்கிறது.
உன்னை மறந்து விட்டதாய் சொன்ன பொய்
உள்ளேயே வலித்துக் கொண்டிருக்கிறது.
உனக்காகவே உன்னை விட்டுக் கொடுத்தது
என்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
வஞ்சித்ததாய் நீ சொன்ன வாள் வார்த்தை
நெஞ்சறுத்துக் கொண்டிருக்கிறது.
திரண்டு வந்த மேகம் கூட என்னைப்பார்த்து
கொஞ்சமாய் துப்பி விட்டு போகிறது .
கசிந்து வந்த கண்ணீர் வழிந்த நீரில்
கரைந்து காணாமல் போகிறது.
இயலாமையின் எரிச்சல்களோடு எதற்காகவோ
ஓடிக் கொண்டே தான் இருக்கிறது
உன் பாரம் சுமக்க முடியாமல்
ஊர் ஒதுக்கிய இந்த மண்குதிரை.
- பித்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சனி திசையில் சனி புத்தி!
- தமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- தென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்
- அது ஒரு நோய், ஸார்!
- 4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்?
- நாடார் மகாநாடு
- பிதாவே மன்னிக்காதீர்
- அக்கினி சாட்சியாக அங்கத்தினர்!
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- விவரங்கள்
- எழுத்தாளர்: பித்தன்
- பிரிவு: கவிதைகள்
மண்குதிரை
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.