முடிந்தவரை முயற்சி செய்தேன்
வாசல் கதவை மட்டுமல்ல - அவள்
மனக்கதவையும் திறக்க மறுத்தாள்
உயிரைவிட முயற்சி செய்தேன்
உரிமை இல்லை அதற்கும் - அவள்
உயிரை நான் சுமப்பதால்
நெருங்கி செல்ல முயற்சி செய்தேன்
புரிந்து கொள்ள மறுக்கிறாள் - அவள்தான்
என் ஆக்ஸிஜன் என்பதை
கடிதத்தில் முயற்சி செய்தேன்
கவரைக் கூட பிரிக்கவில்லை
கசக்கி எறிந்தாள் என் இதயத்தை...
விட்டுவிடு வீண் முயற்சி
வரமாட்டேன் நான் என்றாள்
தொட்டு விடும் என் முயற்சி
தொடர்ந்து நிற்பேன் நான் என்றேன்
புன்னகைத்து நடந்து சென்றாள்
வந்து நின்ற பைக்கில் ஏறி
எவனுடனோ பறந்து சென்றாள்
- ஏழுமலை சுரேஷ் (
வீண் முயற்சி
- விவரங்கள்
- ஏழுமலை சுரேஷ்
- பிரிவு: கவிதைகள்
More articles by ஏழுமலை சுரேஷ்
- அம்மா (24 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.