Manஇயல்பாய்
இருப்பவனுக்குப்
பைத்தியம் என்று
பெயர்

ஓர் இசை மெட்டில்
இயைந்து
கிடப்பவனுக்கு
இசைப் பைத்தியம்

ஆடையே
ஒரு
அவமானச் சின்னம்
இங்கு
யாருக்கோ பொருந்தும்
ஆடையை
யார் யாரோ
அணிந்து கொண்டு அலைகிறார்கள்

உள்ளம்
எப்போதும்
வெளிச்சம் விரும்புவதில்லை

அதனால் தான்
வார்த்தைகள்
நாகரிகப் போர்வைக்குள்
ஒளிந்து கொள்கின்றன

இயல்பாய்
இருப்பதற்கு
இருண்மையே

இளங்கோவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.