சாயபட்டறைகளில் எங்கள்
சந்ததிகள் வளருது!
காலையில் காய போட்ட
துணியெடுக்க -சூரியன்
போனபிறகு வருகிறாள் அம்மா
நிக்க நேரமில்லை நினைத்து
பார்க்க வழியுமில்ல - வேலை
எட்டுமணிநேரமல்ல!
நீங்கள் போட்டுருக்கிற பனியனுக்குள்
புதைந்திருக்கு எங்கள்
வாழ்க்கை - வேலை
எட்டுமணி நேரமல்ல!
படிக்க போன பிள்ளைக்கு
பசியாத்த வழியுமில்ல
குடிக்கிற கூழுக்கே
குடும்பம் முழுக்க
வேலைக்கு - வேலை
எட்டுமணிநேரமல்ல
பள்ளிகூடம் விட்டவுடன்
பறந்து வருவான் பிள்ளை-அம்மா
பாயாசம் வைத்திருப்பாளென
பாசத்துடன் அள்ள வழியில்ல-வேலை
எட்டுமணி நேரமல்ல
நின்னுகிட்டே பார்க்கிறாள்
வேலை அம்மா
உட்கார வாரத்தில்
ஒரு நாள் லீவு
அன்னைக்கும் வேலையாம்
அர்ஜென்டாம் ஆர்டரு-வேலை
எட்டுமணி நேரமல்ல
[திருப்பூரில் பனிரெண்டு மணிநேர வேலை கட்டாயம் குறித்து எனது வேதனையை எழுதியுள்ளேன்]
- தியாகு (
எட்டுமணிநேரமல்ல!
More articles by தியாகு
- மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா? (16 பிப் 2026)
- மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா? (14 மே 2025)
- தமிழ்நாட்டைக் காக்கும் அரண் பெரியார்! (22 ஜன 2025)
- புதுமைத் தமிழ்ஒளி பொதுமைச் செவ்வொளி! (11 செப் 2024)
- மாரிமுத்து - மகாலட்சுமி ஆணவப் படுகொலை (18 அக் 2023)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.