Joyசிப்பிக்குள் விழுந்த முத்தாய் - அன்று
என்னுள் நிறைந்த ரகசியம்

கோடி பூக்கள் கூடிவந்து என் இதயத்தில்
பூத்துக் குலுங்க வைத்த ரகசியம்

கண்ணினை இமைபோல் காத்து - நன்கு
வளர்ந்து வந்த ரகசியம்

ஊன் உறக்கம் திருடி என்னின்
உலகை மாற்றிய ரகசியம்

உயிரை பிரிக்கும் நிலைபோல் என்னுள்
வலிகள் தந்த ரகசியம்

விண் ஏறி மீன்களோடு எனை
விளையாட வைத்த ரகசியம்

பிறவிப் பயன் தீர்த்து என்னை
தாயாக்கிய என் ரகசியம்

பாதுகாத்த ரகசியம் பளிச்சிட்டு உலகறிய - பல
பட்டாம்பூச்சிகள் என்னுள் பறக்கவைத்த ரகசியம்!!!

வெண்ணிலா மீரான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It