
நான் இல்லாவிட்டால் என்ன
உனக்கு வேறு நல்ல பெண்
கண்டிப்பாக கிடைப்பாள் என்கிறாயே,
உன் கவிழ்ந்த தலையை
குனிந்து பார்த்தே
கூனனாகிப் போனவன் நான்
உன் விழியின் கவிதையைக்
கேட்க நினைத்தே
செவிடனாகிப் போனவன் நான்
உன் இதழின் வரிகளை
உற்றுப் படித்துப் படித்தே
குருடனாகிப் போனவன் நான்
இப்படி இருக்கும் என்னை
யாரடி திருமணம் செய்வாள்?
- புத்தொளி (