Kerchiefஎல்லோரிடமும்
இருக்கும்
பத்திரப்படுத்தவென்றே
ஒரு கைக்குட்டை

கடைசியாய் அழுத
கண்ணீர்
சுமந்தாய் இருக்கலாம்

லிப்ஸ்டிக் உறிய 
அவள் உதடு
தொட்டதாய் இருக்கலாம்

பிரிவை சமன்செய்ய
விட்டுப்போனதாய்
இருக்கலாம்

எப்படியெனினும்
அந்தரங்கமானவை
யாரும் பார்க்காவண்ணம்
முகம் வருடிக்கொள்பவை

என்னிடமும் இருக்கிறது
அப்படியோர்
கைக்குட்டை
அதை நினைவுகூரும்
இந்தக் கவிதையுடன்

மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.