Suicide bomberவிழித்து பார்த்த நேரம்
விழி பிதுங்க வைத்தது
ஆம் இந்த உலகத்தில்
அனைத்தும் கிடைக்கவில்லை

என்றாலும் எனக்காக
என் குடும்பத்திற்கு மட்டும் 
கிடைப்பதற்காக என் வழி
கடவுளை நாடினேன் 

சிறு வயதில் வறுமை 
சில நேரம் பட்டினி
வாடினேன் 
என்னை
வழி காட்ட வந்தார்கள் 

உன் கடவுளை அடைய
உன் குடும்பத்திற்காக
நீ மாறவேண்டும் என்றார்கள்

நீ உன் மனதை மாற்றி
எங்களுடன் செயல்படு

போதனை செய்தார்கள்
மனித வெடி குண்டாக
தயார் செய்தார்கள்
தைரியமாக சென்றேன்.....

என் குடும்பத்திற்கு பணம்
நான் ஆனேன் பிணம்...

ராகவன்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.