வெய்யோன் விரல்கள்
Gardenவீசும் தென்றலைத் தீண்ட...
விடுபட்டு ஓடிய தென்றல்
விழித்தெழு என்று
மரங்களை உலுக்க...

கிளைகளின் கிலுகிலுப்பில்
புல்லினங்கள்
பூபாளம் இசைத்தபடி
ஓய்வெடுத்த சிறகுகளை
உதறிச் சிக்கெடுத்து
உயரே பறக்கும்.!

கூம்பிக் கிடந்த
அரும்பு ஒன்று
விடியலுக்குள்
விரிந்து நிற்கும்
விந்தையை
வியந்து நோக்கும்..
புத்தம் புதிதாய்
துளிர்த்து நிற்கும்
தளிர் இலைகள்!

இப்படி
அற்புத இயற்கையின்
அத்தனை அழகையும்
அதிகாலை வேளையில்
அள்ளிப் பருகும்
அதிகப்பட்ச
ஆசையெல்லாம்
எமக்கில்லை....

அரைக்கோப்பை தேநீரை
ஆறும் முன் பருகிடும்
அற்ப ஆசையைத் தவிர!


மலர்விழி இளங்கோவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.