Cigaretteஎன்
இதய அரங்கத்தினுள்
நடன அரங்கேற்றம் செய்யும்
என்
இனிய புகை மாதேவியே
உன் தொடர்ந்த
நடனத்திற்கு
என்
இருமல்கள்தானா
‘ஜதி’ சொல்லக் கிடைத்தன ? !


உறவு

ஏ ! நிலவுப்பெண்ணே
உன்னை
சூரியனோடு சேர்ந்நிருந்து
பார்த்ததே இல்லையே..
பிறகு
எப்படி உனக்கு
இத்தனை
நட்சத்திரக் குழந்தைகள் ? ! 

பொன்னாப்பூர் மா.அர்ச்சுனன், சிங்கப்பூர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.