manமொட்டை மாடியின் இருளில்
தனித்து அமர்ந்திருப்பது போல்
காணப்பட்டாலும்
தனியாக இருப்பதில்லை நான்.

என்னைச் சூழ்ந்து நின்று
கேள்விமேல்
கேள்வி கேட்கிறார்கள்
கடன்காரர்கள்
கேட்ட கேள்விகளையே
கேட்கிறார்கள்
கலை இலக்கியவாதிகள்.

விவாதிக்கவும்,
உரையாடல்களுக்கு
ஒத்திகை பார்க்கவும்
உகந்ததாக இருக்கிறது
இரவு நேர மொட்டை மாடியில்
நான் மேற்கொள்ளூம் தனிமை.

விதம் விதமான
மனிதர்களைச் சுமந்த
தனி ஆளாகப் படியேறி
மொட்டை மாடிக்கு வந்து
அமர்ந்திருக்கிறேன் நான்

இதையெல்லாம் கண்ணுறாமல்
என்ன சார்
தனிமையில் இனிமையா?
என்கிறான்,
என்னைப் போலவே
பலரைச் சுமந்து கொண்டு
படியேறி
மொட்டை மாடிக்கு வந்த
பக்கத்து வீட்டுக்காரன். 

ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It